ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்

Added : செப் 13, 2021
Share
மதுரை-துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மூலப்பொருட்களை அகற்ற அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்தது.துாத்துக்குடியில், வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உள்ளது. இதற்கு எதிராக, 2018 மே 22ல் போராட்டம் நடந்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.ஆலையை நிரந்தரமாக மூடி

மதுரை-துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மூலப்பொருட்களை அகற்ற அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்தது.

துாத்துக்குடியில், வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உள்ளது. இதற்கு எதிராக, 2018 மே 22ல் போராட்டம் நடந்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு சீல் வைத்தது. கொரோனா இரண்டாவது அலை பாதிப்பின்போது, மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. ஏப்., 27ல் உச்ச நீதிமன்ற அனுமதியுடன், ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியது.

ஸ்டெர்லைட் ஆலை தலைமை செயல் அதிகாரி சுமதி, 'ஆலை வளாகத்தில் உள்ள மூலப் பொருட்கள், கழிவுகளை உள்ளூர் கண்காணிப்புக்குழு மேற்பார்வையில் அகற்ற அனுமதி கோரி, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. நீதிபதிகள் செப்., 27க்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X