கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி தரம் மேம்படுத்த குழு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 13, 2021
Share
Advertisement
மதுரை-ரேஷன் அரிசியின் தரத்தை மேம்படுத்த, கடத்தல், முறைகேடுகளை தடுக்க குழு அமைக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மனு தாக்கல்கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை போலீசார், குமார் என்பவர் உட்பட சிலர் மீது, 1.24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 22 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றதாக வழக்கு பதிந்தனர். குமார், உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் மனு

மதுரை-ரேஷன் அரிசியின் தரத்தை மேம்படுத்த, கடத்தல், முறைகேடுகளை தடுக்க குழு அமைக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மனு தாக்கல்கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை போலீசார், குமார் என்பவர் உட்பட சிலர் மீது, 1.24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 22 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றதாக வழக்கு பதிந்தனர். குமார், உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இதுபோல் சிலர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு, 'பொது வினியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியை சாப்பிட முடியாது. எனவே கார்டுதாரர்கள் அரிசியை வாங்கி விற்றுள்ளனர்' என தெரிவித்தது.நீதிபதி உத்தரவு:மனுதாரர்களுக்கு முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. பொது வினியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியின் தரம் சரியில்லாததால், கார்டுதாரர்கள் ரேஷன் கடையில் இருந்து அரிசியை வாங்கி விற்றதாக மனுதாரர் தரப்பு கூறுகிறது.

இதனால், கடத்தல் தொடர்கிறது.பொது வினியோகத் திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற, ரேஷன் அரிசியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பரிந்துரைஅரிசி கடத்தல், முறைகேடுகளைத் தடுக்க நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி.,யைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அக்குழு பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X