பொது செய்தி

தமிழ்நாடு

'அதிகாரிகள் எங்களை மதிப்பதே கிடையாது!' கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவேசம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
உடுமலை:'ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், ஒட்டுமொத்த வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்படுகிறது,' என, குடிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் உட்பட அனைத்து கவுன்சிலர்களும், கூட்டத்தில், கடும் அதிருப்தி தெரிவித்து பேசினர்.குடிமங்கலம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., க்கள்
 'அதிகாரிகள் எங்களை மதிப்பதே கிடையாது!' கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவேசம்

உடுமலை:'ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், ஒட்டுமொத்த வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்படுகிறது,' என, குடிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் உட்பட அனைத்து கவுன்சிலர்களும், கூட்டத்தில், கடும் அதிருப்தி தெரிவித்து பேசினர்.குடிமங்கலம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி தலைமையில் நடந்தது.

பி.டி.ஓ., க்கள் சிவகுருநாதன், சுப்பிரமணியம், துணைத்தலைவர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:ராஜமாணிக்கம் (தி.மு.க.,): ஒன்றிய பொது நிதியில், வார்டுகளுக்கு, நிதி ஒதுக்குவதில், பாரபட்சம் காட்டப்படுகிறது. பெரியபட்டி ஊராட்சி அடிப்படை தேவைகளுக்காக வழங்கப்பட்ட, கருத்துரு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.முருகானந்தம் (தி.மு.க.,): புக்குளம், பொன்னேரி ஊராட்சியில், தடுப்பணை கட்டுவதற்காக, தீர்மானம் நிறைவேற்றி, பரிந்துரை அளித்தும், நடவடிக்கை இல்லை.முரளி (அ.தி.மு.க.,) : வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தேர்வு செய்யப்பட்டது குறித்து, ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு எவ்வித தகவலும் வழங்கவில்லை.
ராஜமாணிக்கம் (தி.மு.க.,): ஒன்றியக்குழுவில், கவுன்சிலர்கள் கோரிக்கைக்கு எவ்வித மதிப்பும் இல்லை. பெயரளவுக்கு கூட்டம் நடத்தி, டீ, பிஸ்கெட் கொடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.துணைத்தலைவர் புஷ்பராஜ் (அ.தி.மு.க.,): தடுப்பணைகள் கட்டுவதற்கான இடத்தேர்வு குறித்து, ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிகள் யாரையும் கலந்து ஆலோசிக்கவில்லை. தன்னிச்சையாகவே, அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். பல முறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கையில் மாற்றம் இல்லை.பி.டி.ஓ., சுப்பிரமணியம்: பணிகள் தேர்வு குறித்து, அரசு வழிகாட்டுதலை பின்பற்றுகிறோம். இத்தகைய புகார் வராமல், இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜமாணிக்கம் (தி.மு.க.,): இதே பதிலை அதிகாரிகள் பல முறை தெரிவித்து விட்டனர்; கடந்தாண்டு, கொடுத்த கருத்துருவுக்கு நிதி ஒதுக்காமல், எந்த அடிப்படையில், தற்போது பணிகள் தேர்வு செய்யப்பட்டது என தெரியவில்லை.துணைத்தலைவர் : தடுப்பணை, ரோடு அமைத்தல் உட்பட வளர்ச்சி பணிகள், வார்டில் நடப்பது குறித்து தெரியாத நிலை உள்ளது. அதிகாரிகள் அலட்சிய போக்கை கைவிடாவிட்டால், வெளிநடப்பு செய்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளோம்.பி.டி.ஓ., சிவகுருநாதன்: ஒன்றிய கவுன்சிலர்கள் கொடுத்துள்ள கருத்துரு குறித்து, பரிசீலிக்கப்படும். தடுப்பணை கட்ட, அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றியுள்ளோம்.

இது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கலாம்.திவ்யா (தி.மு.க.,): மெகா தடுப்பூசி முகாம் பட்டியலில், கொங்கல்நகரம் கிராமம் இடம் பெற்றிருந்தும் முகாம் நடக்கவில்லை. மக்கள் பல மணி நேரம் காத்திருந்து பாதிக்கப்பட்டனர். சுகாதாரத்துறையினர் முறையாக தகவல் வழங்க வேண்டும்.பி.டி.ஓ., சுப்பிரமணி: கொங்கல்நகரத்தில், ஏற்கனவே முகாம் நடத்தப்பட்டுள்ளது. பட்டியலில், அக்கிராமம் இல்லை. இருப்பினும், காத்திருந்த மக்களுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரை அடிப்படையில், உடனடியாக தடுப்பூசிகள் பெறப்பட்டு, மாலையில், மக்களுக்கு செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X