பொது செய்தி

தமிழ்நாடு

நேற்று 5 கிராமங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:தமிழகம் முழுவதும், 40 ஆயிரம் மையங்களில் நேற்று முன்தினம், மெகா தடுப்பூசி முகாம், நடந்தது.கிணத்துக்கடவு தாலுகாவில், 94 முகாம்கள் நடத்தப்பட்டதில், 6,375 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முகாம்களில் எதிர்பார்த்ததை விட, கொரோனா அச்சம் காரணமாக, கூடுதல் எண்ணிக்கையில், மக்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.சில கிராம முகாம்களில், தடுப்பூசி செலுத்திக்

கிணத்துக்கடவு:தமிழகம் முழுவதும், 40 ஆயிரம் மையங்களில் நேற்று முன்தினம், மெகா தடுப்பூசி முகாம், நடந்தது.கிணத்துக்கடவு தாலுகாவில், 94 முகாம்கள் நடத்தப்பட்டதில், 6,375 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முகாம்களில் எதிர்பார்த்ததை விட, கொரோனா அச்சம் காரணமாக, கூடுதல் எண்ணிக்கையில், மக்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.சில கிராம முகாம்களில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனைதொடர்ந்து, நேற்று இரண்டாவது நாளாக, சொலவம்பாளையம், வடபுதுார், ஜக்கார்பாளையம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் நேற்று காலை முதல், மாலை வரை சிறப்பு முகாம் நடந்தது. வடசித்துார், நல்லட்டிபாளையம், சொக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஒவ்வொரு முகாமிலும், 200 'டோஸ்' தடுப்பூசி வினியோகிக்கப்பட்டன. ஊராட்சி துவக்கப்பள்ளிகளில் நடந்த முகாமில், ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலர்கள், ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். தனியார் மருத்துவமனை செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X