திருப்பூர்;கடந்த 9ம் தேதி நிலவரப்படி, மாவட்டத்தில், 18 வயதை கடந்த, 24 லட்சத்து, 77 ஆயிரத்து, 095 பேரில் முதல் தவணை தடுப்பூசியை, பத்து லட்சம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை, 1.98 லட்சம் பேரும் என, 11.98 லட்சத்து பேர் செலுத்தினர். நேற்றுமுன்தினம்(12ம் தேதி) மாவட்டம் முழுவதும், 631 பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், 99 ஆயிரத்து, 752 முதல் 'டோஸ்' 21 ஆயிரத்து, 881 இரண்டாவது 'டோஸ்' என மொத்தம், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 634 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை, 16 லட்சத்து, 12 ஆயிரத்து, 803 ஆக உயர்ந்துள்ளது; இவர்களில், 7.72 லட்சம் பேர் பெண்கள். அதிகபட்சமாக, 18 வயதை கடந்த, 9.51 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.தடுப்பூசி செலுத்தியதில், மாநிலத்தில் மூன்றாமிடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது. மெகா முகாமுக்கு முன்னதாக மாவட்டத்தில், 49 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. தற்போது இது, 61 சதவீதமாக அதிகரித்துள்ளது.ககாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில், 16.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், இன்னமும், ஆறு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. கூடுதல் தடுப்பூசிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து முகாம்கள் நடத்தப்படும்,' என்றனர்.