பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்!

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தின், வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது; 2,493 ஆக இருந்த எண்ணிக்கை, 2,512 ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிக்கான, முன் திருத்தம், அக்., 31 வரை நடக்க உள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 1,500க்கும் அதிகமான வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகள், இரண்டாக பிரிக்கப்பட உள்ளன. அதற்காக, உத்தேச
 மாவட்டத்தில் புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்!

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தின், வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது; 2,493 ஆக இருந்த எண்ணிக்கை, 2,512 ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிக்கான, முன் திருத்தம், அக்., 31 வரை நடக்க உள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 1,500க்கும் அதிகமான வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகள், இரண்டாக பிரிக்கப்பட உள்ளன. அதற்காக, உத்தேச வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் வினீத் நேற்று வெளியிட்டார்.பல்லடம் தொகுதி - 410, திருப்பூர் வடக்கு - 373, அவிநாசி - 313, தாராபுரம் - 298, காங்கயம் - 295, உடுமலை - 294, மடத்துக்குளம் - 287, திருப்பூர் தெற்கு - 242 என, மாவட்டத்தில், 2,512 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தற்போதுள்ள, 2,493 சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக, 19 சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.திருப்பூர் வடக்கு - 11, பல்லடம் - 3, திருப்பூர் தெற்கு - 2, காங்கயம், அவிநாசி, உடுமலை தொகுதிகளில், தலா ஒரு ஓட்டுச்சாவடி வீதம், 19 புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட உள்ளன. எட்டு தொகுதிகளில், 226 சாவடிகளின் பெயர் மாற்றமும், 45 சாவடிகள் இட மாற்றமும், 70 சாவடிகள் கட்டட மாற்றமும் செய்யப்பட உள்ளன.கலெக்டர் பேசுகையில், ''ஆட்சேபனை அல்லது கோரிக்கை இருந்தால், கட்சியினர், 20ம் தேதிக்குள், வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.வரும், 20 முதல், 25ம் தேதி வரை, தொகுதி வாரியான அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, கருத்து கேட்கப்பட்டு, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X