பொது செய்தி

தமிழ்நாடு

'மனு நீதி சோழர்' வசம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, தனி துணை கலெக்டர் சிவகுமாரி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு கொடுத்தனர்.சமூக விரோதி கூடாரம்இந்திய குடியரசு
 'மனு நீதி சோழர்' வசம்

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, தனி துணை கலெக்டர் சிவகுமாரி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு கொடுத்தனர்.சமூக விரோதி கூடாரம்இந்திய குடியரசு கட்சி மாநகர பொறுப்பாளர் ஆனந்தன்: முதலிபாளையம் சிட்கோவில், அரசு கட்டடங்களில், 10 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. பிற, சமூக விரோதிகளின் கூடாரமாகின; தலித் மக்களுக்காக, கட்டடங்களை புதுப்பித்து, தொழில் முனைவோருக்கு கொடுத்து உதவ வேண்டும்.நடைபாதை வேண்டும்அணைமேடு பகுதி மக்கள்: அணைமேட்டில், 140 குடும்பங்கள், 80 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. போலி பத்திரம் வாயிலாக தனியாருக்கு சொந்தமான நிலம் என கூறி, கம்பிவேலி அமைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு நடத்தி, அங்குள்ள மக்களுக்கு நடைபாதை அமைத்து கொடுக்க வேண்டும்.வாடகை வரவில்லைதிருப்பூர் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள்: சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் சுற்றுலா வாகனங்களை இயக்கினோம். தேர்தல் முடிந்து பலமாதமாகியும், தேர்தல் பணிக்கான வாகன வாடகை வழங்கப்படவில்லை. வாடகை தொகையை பெற்றுத்தர வேண்டும்.வீடு ஒதுக்கப்படுமா?தமிழ்நாடு அன்னை இந்தியா தொழிற்சங்க நிர்வாகிகள்: வறுமையில் வாழும் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இல்லை; வாடகை வீட்டில் வசிக்கின்றனர். குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பலமுறை மனு கொடுத்தும், குடிசை மாற்று வாரிய வீடு கிடைக்கவில்லை. இம்முறை, வீடு பெற்றுத்தர வேண்டும்.டி.சி.,க்கு பணம்கணக்கம்பாளையம் ஜாஹிர் ஹூசைன்: எனது மகன், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தான். அரசு பள்ளியில் சேர தனியார் பள்ளியில் மாற்று சான்றிதழ் கேட்டால், 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்கின்றனர்.பறிபோன பணம்மண்ணரையை சேர்ந்த ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கொடுத்த மனு: விஜயமங்கலம் அருகே உருவான குடியிருப்பு பகுதியில், வீட்டுமனை வாங்க, எனது மனைவி பெயரில் பணம் செலுத்தினேன். முன்பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்தும், இதுநாள் வரை கிரயம் செய்து கொடுக்கவில்லை. இதேபோல், பலரும் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர். பணத்தை மீட்டுத்தர வேண்டும்.மதுக்கடை கூடாதுகொங்கணகிரியை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனு: அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவில், பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் உத்தரவை ஏற்று, கொங்கணகிரி கந்தபெருமாள் கோவில் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும். பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடையை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், இலவச வீட்டுமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்க வேண்டுமென, மனு கொடுக்க வந்திருந்தனர்.'மனு நீதி சோழர்'களாக அதிகாரிகளை மதித்து,மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்குமா?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X