காது ஜவ்வு கிழியாது, இனி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காது ஜவ்வு கிழியாது, இனி!

Added : செப் 14, 2021
Share
திருப்பூர்:கனரக வாகனங்களில் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வடக்கு வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் வேலுமணி, பாலசுப்ரமணி, சிவக்குமார் (தெற்கு) ஆகிய அதிகாரிகள் குழு, பழைய பஸ் ஸ்டாண்டில் நேற்று ஆய்வு செய்தனர்.அதில், காமராஜர் ரோடு வழியாக வந்த, 40 பஸ்களில் சோதனை நடத்தியதில், ஆறு மினி பஸ், மூன்று அரசு பஸ்கள், ஆறு தனியார் பஸ் என, 15 பஸ்களில் ஏர்ஹாரன்
 காது ஜவ்வு கிழியாது, இனி!

திருப்பூர்:கனரக வாகனங்களில் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வடக்கு வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் வேலுமணி, பாலசுப்ரமணி, சிவக்குமார் (தெற்கு) ஆகிய அதிகாரிகள் குழு, பழைய பஸ் ஸ்டாண்டில் நேற்று ஆய்வு செய்தனர்.அதில், காமராஜர் ரோடு வழியாக வந்த, 40 பஸ்களில் சோதனை நடத்தியதில், ஆறு மினி பஸ், மூன்று அரசு பஸ்கள், ஆறு தனியார் பஸ் என, 15 பஸ்களில் ஏர்ஹாரன் பொருத்தியிருப்பது தெரிய வந்தது.கடந்த சனிக்கிழமை, கலெக்டர் அலுவலகம் முன் நடந்த சாலை விபத்து நான்கு வயது சிறுமி மினி பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஏர் ஹாரன் சத்தமாக ஒலிப்பதும், விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. இந்த அடிப்படையில், அதிகாரிகள் குழு, பஸ்களில் ஏர்ஹாரன் குறித்து சோதனை நடத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X