பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றரை ஆண்டாக கிடப்பில்...

Added : செப் 14, 2021
Share
Advertisement
பொங்கலுார், செப். 14--பொங்கலுார் ஒன்றிய குழு கூட்டம்,தலைவர் குமார் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., கலைச்செல்வி, துணை தலைவி அபிராமி முன்னிலை வகித்தனர்.இந்திய கம்யூ., கவுன்சிலர் ஜோதிபாசு பேசுகையில், ''தாராபுரம் ரோடு, குப்பிச்சிபாளையம் ஒயின்ஷாப், தொங்குட்டிபாளையம் பன்றி பண்ணை ஆகியவற்றை அகற்ற வேண்டும். கரட்டுப்புதூரில் மேல்நிலை தொட்டி கட்ட வேண்டும். ஒன்றிய நிதியை

பொங்கலுார், செப். 14--பொங்கலுார் ஒன்றிய குழு கூட்டம்,தலைவர் குமார் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., கலைச்செல்வி, துணை தலைவி அபிராமி முன்னிலை வகித்தனர்.இந்திய கம்யூ., கவுன்சிலர் ஜோதிபாசு பேசுகையில், ''தாராபுரம் ரோடு, குப்பிச்சிபாளையம் ஒயின்ஷாப், தொங்குட்டிபாளையம் பன்றி பண்ணை ஆகியவற்றை அகற்ற வேண்டும். கரட்டுப்புதூரில் மேல்நிலை தொட்டி கட்ட வேண்டும். ஒன்றிய நிதியை அனைவருக்கும் சமமாக பிரித்து தரவேண்டும்,'' என்றார்.தி.மு.க.,வை சேர்ந்த சுப்பிரமணி பேசுகையில், ''பொல்லிகாளிபாளையம் அரசு பள்ளிக்கு கூடுதல் கழிப்பிடம் வேண்டும்,'' என்றார்.

ஒன்றியக்குழு தலைவர் குமார் பேசுகையில், ''15வது நிதிக்குழு மானியம், 98 லட்சம் ரூபாய் வந்துள்ளது. இத்தொகை மற்றும் ஒன்றிய பொது நிதி ஆகியவற்றை, 13 கவுன்சிலர்களுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும். வருமானத்தை பெருக்கும் வகையில் வணிக வளாக கடைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.கேத்தனுார் ஊராட்சியில் போர்வெல் அமைத்து மின்மோட்டார் பொருத்துதல், தொட்டம்பட்டி ஆதி திராவிடர் காலனி சிமெண்ட் ரோடு, ரங்கம் பாளையம் ஆழ்குழாய் கிணறு, அகிலாண்டபுரம் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்துதல்.புத்தரச்சல் குட்டை மேம்பாடு, முத்துநகர் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை தொட்டி வரை பைப்லைன் விஸ்தரிப்பு ஆகிய பணிகள் ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால், 23 லட்சத்து, 53ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ரத்து செய்தல் உள்ளிட்ட, 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வளர்ச்சிப்பணிக்கென வந்த நிதியும் திரும்பியது குறித்து, கவுன்சிலர்கள் பேசவில்லை. முன்னதாக, கள்ளிப்பாளையத்தில் இரும்பு கம்பி உருக்காலை அமைக்க அனுமதி, ஒன்றிய பொதுநிதி, 15வது நிதிக்குழு மானியத்தில் வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு செய்தல், பெருந்தொழுவில் கல் குவாரி அமைக்க அனுமதி அளித்தல் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கவுன்சிலர்கள் 'மவுன' மொழி!ஒன்றிய குழு கூட்டம் என்பது பிரச்னைகள் குறித்து தெரிவிப்பதற்கும், விவாதிப்பதற்காகவும்தான். கூட்டத்தில், தலைவர், துணை தலைவர் தவிர 11 கவுன்சிலர்கள் இருக்கும் நிலையில், இருவர் மட்டுமே கூட்டத்தில் பேசினர். ஒரு சில கவுன்சிலர்கள், தங்கள் கோரிக்கைகளை எழுதி கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X