சித்திரைச்சாவடியில் நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சித்திரைச்சாவடியில் நீர்வரத்து அதிகரிப்பு

Added : செப் 14, 2021
Share
தொண்டாமுத்தூர்:மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால், சித்திரைச்சாவடி தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த, 2 வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஓடைகளில், நீர்வரத்து அதிகரித்து, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றிலும், நீர்வரத்து
 சித்திரைச்சாவடியில் நீர்வரத்து அதிகரிப்பு

தொண்டாமுத்தூர்:மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால், சித்திரைச்சாவடி தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த, 2 வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஓடைகளில், நீர்வரத்து அதிகரித்து, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றிலும், நீர்வரத்து அதிகரித்துள்ளது.நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நீர்வரத்து அதிகரித்தது. சித்திரைச்சாவடியிலிருந்து நொய்யல் ஆற்றுக்கு, 490 கன அடியும், கீழ் சித்திரைச்சாவடி வாய்க்காலில், 290 கன அடி தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது.நீரின் வேகமும் அதிகரித்து செல்லும் நிலையில், ஆபத்தை உணராமல், ஆற்றின் நடுவே குளிப்பது, 'செல்பி' எடுத்து கொள்வது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X