பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவம் 7,522 பேருக்கு பயன்  

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோவை:நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிகளுக்கு, வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவி வழங்கும், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் கீழ், கோவையில் இதுவரை, 7,522 பேர் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டம், ஆக., 5ம் தேதி கோவையில் துவக்கி வைக்கப்பட்டது. அதன் படி, 45 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், இயலாமையில் உள்ள நபர்கள் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை

கோவை:நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிகளுக்கு, வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவி வழங்கும், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் கீழ், கோவையில் இதுவரை, 7,522 பேர் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டம், ஆக., 5ம் தேதி கோவையில் துவக்கி வைக்கப்பட்டது. அதன் படி, 45 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், இயலாமையில் உள்ள நபர்கள் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் , நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், என பல்வேறு மருத்துவ சேவைகள் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டது. கோவையில் இத்திட்டத்தின் கீழ், ஆனைமலை வட்டாரத்திலுள்ள, 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 4,284 பேரும், மாநகராட்சியில் 5 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம், 3,238 பேர் உட்பட இதுவரை, 7,522 பேர் பயன்பெற்றுள்ளனர்.இதற்காக, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X