பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி எல்லைக்குள் 76,817 பேருக்கு தடுப்பூசி

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில், நேற்று முன்தினம், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 1,500 இடங்கள், 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை, 7:00 முதல் இரவு, 7:00 வரை முகாம் நடத்த முடிவு செய்திருந்தபோதிலும், 8:30 மணி வரை நடத்தப்பட்டது.இலக்கை தாண்டி, ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 685 பேருக்கு தடுப்பூசி செலுத்தியதாக, அதிகாரப்பூர்வமாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.ஆனால், மத்திய

கோவை:கோவை மாவட்டத்தில், நேற்று முன்தினம், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 1,500 இடங்கள், 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை, 7:00 முதல் இரவு, 7:00 வரை முகாம் நடத்த முடிவு செய்திருந்தபோதிலும், 8:30 மணி வரை நடத்தப்பட்டது.இலக்கை தாண்டி, ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 685 பேருக்கு தடுப்பூசி செலுத்தியதாக, அதிகாரப்பூர்வமாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.ஆனால், மத்திய அரசின் 'கோவின்' இணைய தளத்தில், 18-44 வயதுக்கு உட்பட்டவர்கள் - 80 ஆயிரத்து, 41, 45-60 வயது பிரிவினர் - 36 ஆயிரத்து, 397, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 23 ஆயிரத்து, 46 பேர் என, ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 484 பேருக்கு தடுப்பூசி செலுத்தி இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.கோவை மாநகராட்சி சார்பில், 300 இடங்களில், 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை தாண்டி, 76 ஆயிரத்து, 817 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.இதில், 48 ஆயிரத்து, 616 பேருக்கு முதல் டோஸ், 28 ஆயிரத்து, 201 பேருக்கு இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X