பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையை வேகமாக அழிக்க எம்.பி., உத்தரவு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோவை:வெள்ளலுாரில் ரூ.168 கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், பழைய குப்பையை, 'பயோமைனிங்' முறையில் அழிக்கும் பணியை, பொள்ளாச்சி எம்.பி., சண்முக சுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.திட்ட செயல்பாடுகள் தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் விளக்கினார். வெள்ளலுார் கிடங்கில், 15.50 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பை தேங்கியிருப்பதாகவும், தற்போது, 9 மெட்ரிக் டன் குப்பை,

கோவை:வெள்ளலுாரில் ரூ.168 கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், பழைய குப்பையை, 'பயோமைனிங்' முறையில் அழிக்கும் பணியை, பொள்ளாச்சி எம்.பி., சண்முக சுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.திட்ட செயல்பாடுகள் தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் விளக்கினார். வெள்ளலுார் கிடங்கில், 15.50 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பை தேங்கியிருப்பதாகவும், தற்போது, 9 மெட்ரிக் டன் குப்பை, பயோமைனிங் முறையில் அழிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரவு ஷிப்ட்டுக்கும் ஊழியர்கள் நியமித்து, விரைந்து பணிகளை முடிக்க, எம்.பி., அறிவுறுத்தினார்.அப்போது, மக்கும் குப்பையில் உரம் தயாரிக்க மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தொடர்பாக, எம்.பி.,யிடம் ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் முறையிட்டார்.நிதி பற்றாக்குறையால், கைவிட்டதாக, கமிஷனர் விளக்கம் கூறினார். கூடுதல் இடங்களில் உரம் தயாரிக்கும் மையங்கள் கட்டவும், மீதமுள்ள, 6 லட்சம் மெட்ரிக் டன் குப்பையை அழிக்கவும், திட்ட அறிக்கை தயாரிக்க, எம்.பி., அறிவுறுத்தினார்.துணை கமிஷனர் விமல்ராஜ், நகர பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி கமிஷனர் சுந்தர்ராஜன், நிர்வாக பொறியாளர் ஞானவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X