கோவில் வளாகத்தில் இறைச்சிக்கழிவு!

Added : செப் 14, 2021
Share
Advertisement
நுாறாவது வார்டில் குடிகாரர்கள் அட்டகாசம்ஆபத்தான மரத்தை அகற்றணும்ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கோபாலபுரம், ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள மரம், பட்டுபோய் விழும் நிலையில் உள்ளது. இம்மரத்தை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.- தியாகு, ரேஸ்கோர்ஸ்.சுகாதார சீர்கேடுபீடம்பள்ளி, நடுப்பாளையம், ஆதித்யா கார்டனில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவு நீர் குளம்போல் தேங்கியுள்ளது;

நுாறாவது வார்டில் குடிகாரர்கள் அட்டகாசம்

ஆபத்தான மரத்தை அகற்றணும்ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கோபாலபுரம், ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள மரம், பட்டுபோய் விழும் நிலையில் உள்ளது. இம்மரத்தை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.- தியாகு, ரேஸ்கோர்ஸ்.

சுகாதார சீர்கேடுபீடம்பள்ளி, நடுப்பாளையம், ஆதித்யா கார்டனில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவு நீர் குளம்போல் தேங்கியுள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- விட்டோபா, ஆதித்யா கார்டன்.

கோவில் வளாகத்தில் அட்டகாசம்மாநகராட்சி, 100வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார், மேட்டூர் மாரியம்மன் கோவில் வளாகம், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. மது பாட்டில்கள், இறைச்சி மற்றும் உணவு கழிவுகள் வளாகம் முழுவதும் சிதறிக்கிடக்கிறது. அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சக்திவேல், போத்தனுார்.

குப்பை அள்ளுவதில்லைரேஸ்கோர்ஸ், ரெட்பீல்ட்ஸ் பகுதியில், காமராஜ் ரோடு - முத்துசாமி செட்டியார் லே-அவுட் திருப்பத்தில், குப்பை குவிந்துள்ளது.- சந்திரசேகர், காமராஜ் ரோடு.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 96வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார் காந்திஜி ரோடு, தாயம்மாள் லே-அவுட்டில் உள்ள, மின் கம்பங்களில்(எண்: 53, 54) கடந்த 10 நாட்களாக விளக்கு எரிவதில்லை. இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.- பழனிசாமி, தாயம்மாள் லே-அவுட்.

நிரம்பி வழியுது குப்பை தொட்டிகவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர்.நகர் இரண்டாவது வீதியில் துாய்மை பணி மேற்கொள்ளப்படுவதில்லை. இங்குள்ள குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதன் அருகிலேயே குப்பையும் குவிந்துள்ளது; துர்நாற்றம் வீசுகிறது.- கார்த்தி, எஸ்.கே.ஆர்., நகர்.

வாகன ஓட்டிகள் அவதிபாலத்துறை - பச்சாபாளையம் ரோட்டில் உள்ள திருப்பத்தில், சாலை ஆங்காங்கே மேடு பள்ளமாக, சிறு சிறு வேகத்தடைகள் போல் உள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- சிவராமன், பச்சாபாளையம்.

நடுசாலையில் பள்ளம்வடவள்ளி, நேதாஜி ரோட்டின் மத்தியில் உள்ள, குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- ஹரி, வடவள்ளி.

நாய் தொல்லைசரவணம்பட்டி, விசுவாசபுரம் அருகில் உள்ள, இன்ஜினியர்ஸ் காலனியில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மக்கள் அச்சப்படுகின்றனர்.- வடிவேல், இன்ஜினியர்ஸ் காலனி.

விளக்கு எரிவதில்லைசுந்தராபுரம் - இடையர்பாளையம் ரோட்டில் உள்ள, பெரும்பாலான மின் கம்பங்களில், விளக்குகள் எரிவதில்லை.- மகேந்திரன், குனியமுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X