பொது செய்தி

தமிழ்நாடு

சாலிகிராமம் இடையே மெட்ரோ ரயில் பணி இன்று துவக்கம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை : கோடம்பாக்கம் பவர்ஹசில் இருந்து சாலிகிராமம் வரை, மெட்ரோ ரயில் பாதைக்கான ஆரம்ப கட்ட பணிகள் இன்று துவங்குகின்றன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61,843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே, 26.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதை மற்றும் நிலையங்கள்
 சாலிகிராமம் இடையே மெட்ரோ ரயில் பணி இன்று துவக்கம்

சென்னை : கோடம்பாக்கம் பவர்ஹசில் இருந்து சாலிகிராமம் வரை, மெட்ரோ ரயில் பாதைக்கான ஆரம்ப கட்ட பணிகள் இன்று துவங்குகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61,843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே, 26.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதை மற்றும் நிலையங்கள் அமைக்க, நான்கு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, மெட்ரோ பாதை மற்றும் நிலையங்கள் அமைப்பதற்கான பகுதிகளில், ஒப்பந்த நிறுவனங்களால், ஜூன், 6ம் தேதியில் இருந்து ஆரம்ப கட்ட பணிகள் பல பிரிவுகளாக துவங்கப்பட்டு வருகின்றன.ஆரம்பக்கட்ட பணிகள் நடக்கும் பகுதிகளில், மெட்ரோ பாதை மற்றும் நிலையங்கள் அமைக்கும் இடங்களிலும், திட்ட பணிகளை மேற்பார்வை செய்வதற்கான அலுவலகம் அமைக்கவும், தேவையான இடங்களில், தற்காலிக இரும்பு தடுப்பும் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், பவர்ஹவுஸ் - சாலிகிராமம், 80 அடி சாலை வரை, மெட்ரோ பாதை ஆரம்ப கட்ட பணிகள், ஒப்பந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், பவர்ஹவுஸ் முதல், சாலிகிராமம், 80 அடி சாலை வரை, இன்று முதல், ஓராண்டு காலம் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இதனையொட்டி, மெட்ரோ அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனங்களின் அதிகாரிகள், ஆரம்ப கட்ட பணிகள் துவங்கும் இடங்களில், இன்று, பார்வையிட்டு, ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின், கட்டுமான பணிகளுக்கான நடவடிக்கைகள், தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X