பொது செய்தி

தமிழ்நாடு

சர்ச் மோதல் வழக்கு; நிபந்தனை தளர்வு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோவை:சர்ச்சில் ஏற்பட்ட மோதல் வழக்கில், முன்ஜாமின் பெற்ற ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை முழுவதும் தளர்த்தப்பட்டது.கோவை ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கல்லுாரியில், கடந்த ஜூலை 19ல் நடந்த சி.எஸ்.ஐ., ஆல் சோல்ஸ் சர்ச் நிர்வாக குழு கூட்டத்தில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், வக்கீல் நேச மெர்லினை தாக்கியது தொடர்பாக, பாதிரியார் சார்லஸ், அருள்மணி, ஸ்டீபன்,

கோவை:சர்ச்சில் ஏற்பட்ட மோதல் வழக்கில், முன்ஜாமின் பெற்ற ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை முழுவதும் தளர்த்தப்பட்டது.கோவை ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கல்லுாரியில், கடந்த ஜூலை 19ல் நடந்த சி.எஸ்.ஐ., ஆல் சோல்ஸ் சர்ச் நிர்வாக குழு கூட்டத்தில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், வக்கீல் நேச மெர்லினை தாக்கியது தொடர்பாக, பாதிரியார் சார்லஸ், அருள்மணி, ஸ்டீபன், அருள் பிரவீன், சுஜில் ஈசா, ஆல்வின், ஜேக்கப், ஜெபகிங், மற்றொரு ஸ்டீபன் ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அவர்களுக்கு கோர்ட் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது. அதன்படி, வாரத்தில் இரண்டு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். நிபந்தனையை தளர்த்த கோரி மனு செய்தனர். விசாரித்த மாவட்ட நீதிபதி, விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X