பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மருத்துவ முகாம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
மீஞ்சூர் : மீஞ்சூர், அரியன்வாயல் பகுதியில் நேற்று, காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.இதில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அரியன்வாயல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 90 பேர் பங்கேற்று, மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை

மீஞ்சூர் : மீஞ்சூர், அரியன்வாயல் பகுதியில் நேற்று, காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.

இதில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அரியன்வாயல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 90 பேர் பங்கேற்று, மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றனர்.காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு உதவினர்.சர்க்கரை நோயை கட்டுபடுத்துவது, உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பது தொடர்பாக பல்வேறு மருத்துவ மற்றும் உடற்பயிற்சி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.'கோவிட் -19' தடுப்பூசி ஊசி போடுவதன் அவசியம் குறித்தும் முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X