பொது செய்தி

தமிழ்நாடு

தினசரி நிரம்பி வழியும் கழிவு நீர் கால்வாய்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை : கோடம்பாக்கம் மண்டலத்தில், தினமும் நிரம்பி வழியும் கழிவு நீர் கால்வாயால், சிறிய தெருக்கள் முதல் பிரதான சாலைகள் வரை, கழிவு நீர் குளம்போல் தேங்குகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கோடம்பாக்கம் மண்டலத்தில், வடபழநி டிப்போ துவங்கி ஆவிச்சி பள்ளி சிக்னல் வரையிலான, 129வது வார்டுக்கு உட்பட்ட சாலிகிராமம் காவேரி தெரு,

சென்னை : கோடம்பாக்கம் மண்டலத்தில், தினமும் நிரம்பி வழியும் கழிவு நீர் கால்வாயால், சிறிய தெருக்கள் முதல் பிரதான சாலைகள் வரை, கழிவு நீர் குளம்போல் தேங்குகிறது.

இதனால், கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கோடம்பாக்கம் மண்டலத்தில், வடபழநி டிப்போ துவங்கி ஆவிச்சி பள்ளி சிக்னல் வரையிலான, 129வது வார்டுக்கு உட்பட்ட சாலிகிராமம் காவேரி தெரு, சத்தியமூர்த்தி தெரு மற்றும் வெங்கடேஷ்வரா தெரு.மேலும், பார்த்தசாரதி தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, மசூதி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த இரண்டாண்டிற்கும் மேலாக பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து, சாலையில் கழிவுநீர் தேங்குவது தொடர்கதையாகி உள்ளது.பிரதான சாலைகடும் துர்நாற்றத்தால், சுற்றியுள்ள குடியிருப்பு மக்கள் சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். சிலர் மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் அவதியடைந்து வருகின்றனர். தோல் நோய் உள்ளிட்ட தொற்று பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.அதேபோல், வடபழநி - ஆற்காடு சாலை, ஏ.வி.எம்., சிக்னலில், போலீஸ் பூத் அருகே பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து சாலையில் பாய்கிறது. மேலும், ஏ.வி.எம்., சந்திப்பில் இருந்து விருகம்பாக்கம் செல்லும் ஆற்காடு சாலையில், மேலும், மூன்று இடங்களில் பாதாள சாக்கடை 'மேன் ஹோல்' மேல் மூடி வழியாக, கழிவு நீர் நிரம்பி சாலையில் வழிந்தோடி, குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.இந்த பிரச்னையும் நேற்றும் இன்றும் அல்ல, இரண்டாண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. இதனால், வடபழநிபேருந்து நிலையம்செல்லும் பயணியர், ஆற்காடு சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசலும் தொடர்கிறது.பருவ மழைக்காலங்களில், இப்பகுதி மக்கள் மேலும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, நோய் பரப்பும் இடமாக இப்பகுதிகள் மாறாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.பணம் கேட்கும் ஊழியர்கள்கழிவு நீர் பிரச்னை குறித்து, குடிநீர் வாரியத்திற்கு போன் செய்தால், 'இதோ வந்துவிடுகிறோம்... அதோ வந்துவிடுகிறோம்' என்கின்றனர். அப்படி வந்தாலும் மேலோட்டமாக பார்த்துவிட்டு செல்கின்றனர். மேலும், 'கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது' என, மொபைல் போன் வாயிலாக தகவல் தெரிவிக்கின்றனரோ, அடைப்பு எடுத்த பின், அவர்களிடம் பணம் எதிர்பார்க்கின்றனர். இதனால், போன் செய்தவர், தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொள்கிறார்.நிரந்தர தீர்வு எப்போது?இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:கழிவு நீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளதாக புகார் அளித்ததும், கழிவுநீர் லாரி வாயிலாக அடைப்பை எடுத்து விடுகின்றனர். இப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை, பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. தற்போது, குடியிருப்புகளும் அதிகரித்துள்ளதால், பாதாளச் சாக்கடை கொள்ளளவை விட, கழிவு நீர் அதிகம் பாய்வதால், இப்பிரச்னை வாடிக்கையாகி உள்ளது. இதனால், நிரந்தர தீர்வு காண, குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், புகார் வந்ததும் அடைப்பை சரி செய்து விடுகிறோம். மக்கள் 'நாப்கின்' உள்ளிட்ட பொருட்களை, பாதாள சாக்கடையில் விடுகின்றனர். இதனால், அதிகமாக அடைப்பு ஏற்படுகிறது. ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணியின்போது, பாதாள சாக்கடை குழாய் மாற்றி அமைக்கப்படும். அதன் பின், பிரச்னை வராது என, நம்புகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X