பொது செய்தி

தமிழ்நாடு

புள்ளி மான்களுக்கு இடையூறு: பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021
Share
Advertisement
கூடலுார்:'முதுமலையில், மாலை நேரங்களில், புல்வெளிகளில் ஓய்வெடுக்கும் புள்ளிமான்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம்- கர்நாடகா மாநில சாலையோரம், மான்கள் அதிகளவில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. மாலை வேளையில் புல்வெளியில் படுத்து ஓய்வு எடுத்து வருகின்றன. சிலர், வனத்துறை எச்சரிக்கையை மீறி, மான்களின்
 புள்ளி மான்களுக்கு இடையூறு: பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

கூடலுார்:'முதுமலையில், மாலை நேரங்களில், புல்வெளிகளில் ஓய்வெடுக்கும் புள்ளிமான்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம்- கர்நாடகா மாநில சாலையோரம், மான்கள் அதிகளவில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. மாலை வேளையில் புல்வெளியில் படுத்து ஓய்வு எடுத்து வருகின்றன. சிலர், வனத்துறை எச்சரிக்கையை மீறி, மான்களின் அருகே வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

இதனால், அவைகளின் அமைதியான சூழல் பாதிக்கப்படுகிறது.வனத்துறையினர் கூறுகையில்,'சாலையோரங்களில், மேய்ச்சலில் ஈடுபடும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும். எச்சரிக்கையை மீறி போட்டோ எடுத்து இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது, சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X