பொது செய்தி

தமிழ்நாடு

விண்ணப்பம் பெற மாணவர்கள் குவிந்ததால் 'தள்ளு முள்ளு'

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி அரசு கலை கல்லுாரியில் விண்ணப்பம் பெற மாணவர்கள் குவிந்ததால் 'தள்ளு முள்ளு' ஏற்பட்டது.ஊட்டி அரசு கலை கல்லுாரியில் இளங்கலையில், 18 பாடப்பிரிவுகள் உள்ளன. 1,300 இடங்களுக்கு, 4,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் மார்க் அடிப்படையில், முதல் 'ஷிப்ட்' பாட பிரிவுகளுக்கு சேர்க்கை முடிந்துள்ளது.இரண்டாவது 'ஷிப்ட்' நேரத்தில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு
 விண்ணப்பம் பெற மாணவர்கள் குவிந்ததால் 'தள்ளு முள்ளு'

ஊட்டி:ஊட்டி அரசு கலை கல்லுாரியில் விண்ணப்பம் பெற மாணவர்கள் குவிந்ததால் 'தள்ளு முள்ளு' ஏற்பட்டது.ஊட்டி அரசு கலை கல்லுாரியில் இளங்கலையில், 18 பாடப்பிரிவுகள் உள்ளன. 1,300 இடங்களுக்கு, 4,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் மார்க் அடிப்படையில், முதல் 'ஷிப்ட்' பாட பிரிவுகளுக்கு சேர்க்கை முடிந்துள்ளது.இரண்டாவது 'ஷிப்ட்' நேரத்தில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் பெற கல்லுாரி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை, நீலகிரி, கோவை உட்பட வெளி மாவட்ட மாணவ, மாணவிகள் ஏராளமானோர் விண்ணப்பம் பெற குவிந்ததால் 'தள்ளு முள்ளு' ஏற்பட்டது. பாடப்பிரிவு குறித்து மாணவர்களுக்கு சரியான விளக்கம் அளிக்கப்படாததால் விண்ணப்பம் பெற வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.கல்லுாரி முதல்வர் கணேசன் கூறுகையில்,''இன்று(நேற்று) தான் பொறுப்பேற்றுள்ளேன். மாணவர்கள் சேர்க்கை எப்படி நடந்துள்ளது என்பது தெரியவில்லை. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சரி பார்த்து கொண்டிருக்கிறோம். குளறுபடி ஏற்பட்டிருந்தால், முறைப்படுத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X