ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க தினம்

Added : செப் 14, 2021
Share
கோத்தகிரி:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின், கோத்தகிரி வட்ட கிளை சார்பில், 35வது அமைப்பு தினம் நிகழ்ச்சி நடந்தது.சங்க மாவட்ட துணை தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஜானகிராமன் பேசினார்.இதில், 'பந்தலுார் மற்றும் குந்தா பகுதிகளில் கூடுதலாக, இரண்டு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்; ஊராட்சி அலுவலர்களின் பளுவை குறைக்க ஏதுவாக,

கோத்தகிரி:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின், கோத்தகிரி வட்ட கிளை சார்பில், 35வது அமைப்பு தினம் நிகழ்ச்சி நடந்தது.சங்க மாவட்ட துணை தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஜானகிராமன் பேசினார்.இதில், 'பந்தலுார் மற்றும் குந்தா பகுதிகளில் கூடுதலாக, இரண்டு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்; ஊராட்சி அலுவலர்களின் பளுவை குறைக்க ஏதுவாக, தற்போது உள்ள, 35 கிராம ஊராட்சிகளை, 95 ஊராட்சிகளாக உயர்த்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. செயலாளர் குமார் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X