கோவிட் 'ஜாமின்' இல்லை: உயர்நிலை குழு விளக்கம்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுடில்லி: 'கொள்ளை, திருட்டு, பணத்துக்காக ஆள்கடத்தல் வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு கோவிட் கால இடைக்கால 'ஜாமின்' வழங்க முடியாது' என, உயர்நிலைக் குழு தெரிவித்துள்ளது.கேவிட் காலத்தின்போது சிறைகளில் நெருக்கடியை குறைப்பதற்காக குறிப்பிட்ட சில வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உயர்நிலை குழு
Corona Virus, Covid 19, Corona, கோவிட்,தொற்று, காலம், ஜமீன், மறுப்பு

புதுடில்லி: 'கொள்ளை, திருட்டு, பணத்துக்காக ஆள்கடத்தல் வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு கோவிட் கால இடைக்கால 'ஜாமின்' வழங்க முடியாது' என, உயர்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

கேவிட் காலத்தின்போது சிறைகளில் நெருக்கடியை குறைப்பதற்காக குறிப்பிட்ட சில வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.


latest tamil news


உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கி தலைமையில் இந்தத் குழு அமைக்கப்பட்டது. எந்தெந்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கலாம் என, வழிகாட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில உயர் நீதிமன்றங்கள் விளக்கம் கோரியிருந்தன. அதன்படி அளித்துள்ள பதிலில் 'கொள்ளை, திருட்டு, பணத்துக்காக ஆள்கடத்தல் போன்ற குற்றங்கள் செய்தவர்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது' என, உயர்நிலை குழு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X