சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,யிடம் தகராறு போதை ஆசாமி மீது வழக்கு

Added : செப் 14, 2021
Share
Advertisement
ராயப்பேட்டை : மதுபோதையில் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில், நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் முகமது மொய்தீன், 50, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்ததில், மது அருந்தி இருப்பது தெரிய வந்தது.உதவி

ராயப்பேட்டை : மதுபோதையில் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில், நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் முகமது மொய்தீன், 50, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்ததில், மது அருந்தி இருப்பது தெரிய வந்தது.உதவி ஆய்வாளரிடம் அவர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். விசாரணையில் தண்டலம், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சூர்யா, 23, என்பதும், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X