பொது செய்தி

தமிழ்நாடு

வேறு பகுதிகளில் பிடிக்கும் நாய்களை குடியிருப்பில் விடுவிப்பதால் அதிர்ச்சி

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : மற்ற இடங்களில் பிடிக்கும் நாய்களை, குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் விட்டுச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் காலடிப்பேட்டை, எல்லையம்மன் கோவில் சந்திப்பு, தேரடி, பெரியார் நகர், அஜாக்ஸ், மேற்கு பகுதிகள், நெய்தல் நகர், எர்ணாவூர், எண்ணுார் சுற்றுவட்டார பகுதிகளில் உரிமையாளர் இல்லாத தெருநாய்கள் அதிகளவில்

திருவொற்றியூர் : மற்ற இடங்களில் பிடிக்கும் நாய்களை, குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் விட்டுச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் காலடிப்பேட்டை, எல்லையம்மன் கோவில் சந்திப்பு, தேரடி, பெரியார் நகர், அஜாக்ஸ், மேற்கு பகுதிகள், நெய்தல் நகர், எர்ணாவூர், எண்ணுார் சுற்றுவட்டார பகுதிகளில் உரிமையாளர் இல்லாத தெருநாய்கள் அதிகளவில் உள்ளன.இதில் சில நாய்கள் ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இரவு நேரங்களில், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை, மின்னல் வேகத்தில் விரட்டிச் செல்லும் நாய்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.சிறுவர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், காய்கறி வியாபாரிகளை தெருவுக்குள் நுழைய விடாமல் துரத்திக் கடிக்கின்றன.இதனால், மரண பயம் ஏற்படுவதாக பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.தெருக்களில் இருக்கும் நாய்களை பிடிக்க கோரிக்கை விடுத்தால், எங்கேயோ பிடித்த நாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் சத்தமின்றி, குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய காலி மனைகளில் விட்டுச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.அப்படி விட்டுச் செல்லப்படும் நாய்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, பலரையும் அச்சுறுத்துகின்றன. மாநகராட்சி உயரதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X