சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு மே.வங்க சபாநாயகர் 'சம்மன்'

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கோல்கட்டா-தங்கள் மாநில எம்.எல்.ஏ.,க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன், தன்னிடம் முன் அனுமதி பெறாதது குறித்து, 22ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க கோரி, சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு மேற்கு வங்க சபாநாயகர், 'சம்மன்' அனுப்பியுள்ளார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபை சபாநாயகராக பிமன்

கோல்கட்டா-தங்கள் மாநில எம்.எல்.ஏ.,க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன், தன்னிடம் முன் அனுமதி பெறாதது குறித்து, 22ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க கோரி, சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு மேற்கு வங்க சபாநாயகர், 'சம்மன்' அனுப்பியுள்ளார்.latest tamil news


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபை சபாநாயகராக பிமன் பண்டோபாத்யாய் உள்ளார். இந்நிலையில், கோல்கட்டாவில் சபாநாயகர் பண்டோபாத்யாய் கூறியதாவது:பல்வேறு வழக்குகள் தொடர்பாக, ஆளும் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலர் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நேரில் ஆஜராக கோரி, அவர்களுக்கு சம்மனும் அனுப்பியுள்ளது.


latest tamil news


ஆனால், அதற்கு என்னிடம் முன் அனுமதி எதுவும் பெறவில்லை. அனுமதி கேட்டு மனுவும் கொடுக்கவில்லை. இதையடுத்து, இது பற்றி வரும் 22ல் நேரில் விளக்கம் அளிக்க கோரி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
14-செப்-202116:45:54 IST Report Abuse
R VENKATARAMANAN The state governments are only subordinates to the central Government. Of they have some limited powers within which they can crawl and the state governments can not assume or go beyond the prescribed limits. The speaker of a state government is also limited to some extent only. He can threaten the local MLAs . His power is only time factor. He has no authority to issue any such nonsense. He will reap the consequence .
Rate this:
Cancel
14-செப்-202111:10:32 IST Report Abuse
ஆரூர் ரங் அடுத்து ஜோ பைடனுக்கு நோட்டீஸ்🥱 அனுப்புவாரோ?
Rate this:
Cancel
rajasekaran - neyveli,இந்தியா
14-செப்-202111:08:32 IST Report Abuse
rajasekaran கொல்கத்தாவில் முட்டாள்கள் ஆட்சியி உடனடியாக கலைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X