தேர்தல் வன்முறை வழக்கு: 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுடில்லி- மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் குறித்து, கோல்கட்டா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் 20ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்,

புதுடில்லி- மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் குறித்து, கோல்கட்டா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் 20ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.



latest tamil news


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கர கலவரம் வெடித்தது. பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர். பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

'இந்த வன்முறை சம்பவம் குறித்து தனி அதிகாரம் பெற்ற விசாரணை அமைப்புகள் விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, தேசிய மனித உரிமை கமிஷன் தெரிவித்தது.'சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கலவரத்தின் போது நடந்த மிக கொடூர வன்முறைகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தும்.


latest tamil news


இதர வன்முறை சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிறப்பு விசாரணை குழு விசாரணை நடக்கும்' என, கோல்கட்டா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 'இந்த மனு வரும் 20ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X