பொது செய்தி

இந்தியா

பெண் குழந்தை பிறந்ததை கொண்டாட இலவச பானி பூரி வழங்கிய வியாபாரி

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
போபால்-மத்திய பிரதேசத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாட விரும்பிய வியாபாரி, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பானி பூரியை மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.மத்திய பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்தவர் அஞ்சல் குப்தா, 28. பானி பூரி வியாபாரியான இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அதை கொண்டாடும் வகையில் போபாலின் கோலார்

போபால்-மத்திய பிரதேசத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாட விரும்பிய வியாபாரி, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பானி பூரியை மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.



latest tamil news


மத்திய பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்தவர் அஞ்சல் குப்தா, 28. பானி பூரி வியாபாரியான இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அதை கொண்டாடும் வகையில் போபாலின் கோலார் பகுதியில் தற்காலிகமாக மூன்று பானி பூரி கடைகளை அமைத்தார். 'பிற்பகல் 1:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை அனைவருக்கும் இலவச பானி பூரி வழங்கப்படும்' என, அறிவித்தார். இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதால் அப்பகுதியில் மக்கள் திரண்டனர். 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பானி பூரியை அஞ்சல் குப்தா இலவசமாக வழங்கினார்.


latest tamil news


இது குறித்து அவர் கூறியதாவது:பெண் குழந்தை பிறந்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் சிலர் பெண் குழந்தையை வளர்க்க அதிக செலவு ஏற்படும் என்றனர். எதிர்காலத்தில் திருமணம் உள்ளிட்டவற்றுக்காக அதிக பணம் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படும் என எச்சரித்தனர்.அவர்களுக்கு பதிலடி கொடுக்க விரும்பினேன். பெண் குழந்தை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும், தாங்கள் அதிர்ஷ்டசாலி என பெருமைப்பட வேண்டும். இதை மக்களிடம் கொண்டு செல்லவே இதுபோல வித்தியாசமான ஒரு முயற்சியை மேற்கொண்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
14-செப்-202112:09:27 IST Report Abuse
Nellai tamilan வீட்டில் ஒரு மகள் இருந்தால் அந்த வீடே பிரகாசம் அடையும். தேவியின் வடிவம் மகள்
Rate this:
Cancel
k.parthiban - coimbatore,இந்தியா
14-செப்-202109:30:27 IST Report Abuse
k.parthiban நல் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Humayun - Chidambaram - Chidambaram,இந்தியா
14-செப்-202108:03:59 IST Report Abuse
Humayun - Chidambaram மகள்கள் தேவதைகள் பெண் இல்லையேல் மண் இல்லை ஹுமாயூன் A. - சிதம்பரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X