சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் வாலிபர் பலி

Added : செப் 14, 2021
Share
Advertisement
புழல் : கார் உரசியதால், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து, அடையாளம் தெரியாத மற்றொரு வாகனத்தில் சிக்கி இறந்தார்.சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம் பஞ்செட்டி கிராமம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் விஜயன், 27; அவர், நேற்று காலை, 9:45 மணியளவில், தன் நண்பர் சதீசுடன், 25; அம்பத்துாரில் இருந்து சென்னை - மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக, இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு

புழல் : கார் உரசியதால், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து, அடையாளம் தெரியாத மற்றொரு வாகனத்தில் சிக்கி இறந்தார்.

சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம் பஞ்செட்டி கிராமம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் விஜயன், 27; அவர், நேற்று காலை, 9:45 மணியளவில், தன் நண்பர் சதீசுடன், 25; அம்பத்துாரில் இருந்து சென்னை - மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக, இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.புழல் அருகே முந்திச்சென்ற கார், இவரது வாகனம் மீது உரசியதால், இவர்கள் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.அப்போது, அடையாளம் தெரியாத மற்றொரு வாகனத்தில் சிக்கி, விஜயன் சம்பவ இடத்திலேயே பலியானார். சதீஷ் காயத்துடன் உயிர் தப்பினார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X