உ.பி., முதல்வர் யோகி மீது வழக்கு

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
முசாபர்பூர்-முஸ்லிம்களை விமர்சித்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக, பீஹார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அவர் பேசியதாவது:உ.பி.,யில் நான் ஆட்சி அமைப்பதற்கு முன்பு வரை, ரேஷன் பொருட்கள் ஏழை எளிய

முசாபர்பூர்-முஸ்லிம்களை விமர்சித்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக, பீஹார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அவர் பேசியதாவது:உ.பி.,யில் நான் ஆட்சி அமைப்பதற்கு முன்பு வரை, ரேஷன் பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு முறையாக கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டியதை, 'அப்பா ஜான்' என கூறும் நபர்கள் தின்று வந்தனர்.இவ்வாறு அவர் பேசினார்.அப்பா ஜான் என்பது, முஸ்லிம் சமூகத்தில் தந்தையை குறிக்கும். முதல்வர் ஆதித்யநாத் முஸ்லிம் மக்களை மறைமுகமாக அவ்வாறு கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில் பீஹாரின் முசாபர்பூரில் உள்ள மாவட்ட தலைமை நடுவர் நீதிமன்றத்தில், ஹாஷ்மி என்ற சமூக ஆர்வலர் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்த கருத்து, முஸ்லிம் சமூக மக்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-செப்-202112:16:17 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தன மதத்துக்குஎன்று தனி நாடு கேட்டு வாங்கி அடஹி இஸ்லாமிய நாடாகவும் அறிவித்தார்கள் ஆனால் இங்கு இளிச்சவாய அரசியல் மற்றும் சுயநல வாத அரசியல் வாதிகளால் சவால் விடும் அளவுக்கு இங்கு நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
14-செப்-202110:44:22 IST Report Abuse
Abdul Aleem இந்த ஆள முதலில் உள்ள தள்ளுங்கோ உத்தர பிரதேசம் நல்லகிவிடும்
Rate this:
Cancel
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
14-செப்-202110:29:47 IST Report Abuse
தமிழன் மோடிய விட அதிகம் விளம்பர ஆர்வமுள்ளவர் போல ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X