பொது செய்தி

தமிழ்நாடு

வாகன நிறுத்துமிடமாக மாறிய திருவொற்றியூர் நெடுஞ்சாலை

Added : செப் 14, 2021
Share
Advertisement
தண்டையார்பேட்டை : திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபாதையை ஆக்கிரமிக்கும் இருசக்கர வாகனங்களால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. குறுகிய சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் கடும் போக்குவரத்து
 வாகன நிறுத்துமிடமாக மாறிய திருவொற்றியூர் நெடுஞ்சாலை

தண்டையார்பேட்டை : திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபாதையை ஆக்கிரமிக்கும் இருசக்கர வாகனங்களால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. குறுகிய சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஏற்கனவே இந்த நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக உள்ளது. தற்போது வாகனங்களும் சாலையை ஆக்கிரமிப்பதால், தினமும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் நெரிசலில் சிக்கித் தவிப்பது தொடர்கிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை போக்குவரத்து போலீசாரிடம் புகார் அளித்தும், பல மாதங்களாக வாகனங்கள் அப்புறப்படுத்தப்படாமலே இருக்கின்றன.

இதனால், நடைபாதை ஆக்கிரமிப்புக்குஉள்ளாகி, 'பீக் ஹவர்'களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போக்குவரத்து போலீசார் உடனே அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X