பொது செய்தி

தமிழ்நாடு

சுத்தமானது வாரிய இடம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
வேளச்சேரி : பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், புதர் மண்டி கிடந்த குடிநீர் வாரிய இடம், சுத்தம் செய்யப்பட்டது.அடையாறு மண்டலம், 177 வது வார்டு, வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் 4,000 சதுர அடி பரப்பு கொண்ட குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு செயல்பட்டு வந்த வாரிய அலுவலகம், நிர்வாக வசதிக்காக, வேறு இடத்திற்கு மாறியது. இதனால், 10 ஆண்டுகளாக இந்த இடம்

வேளச்சேரி : பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், புதர் மண்டி கிடந்த குடிநீர் வாரிய இடம், சுத்தம் செய்யப்பட்டது.அடையாறு மண்டலம், 177 வது வார்டு, வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் 4,000 சதுர அடி பரப்பு கொண்ட குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடம் உள்ளது.

இங்கு செயல்பட்டு வந்த வாரிய அலுவலகம், நிர்வாக வசதிக்காக, வேறு இடத்திற்கு மாறியது. இதனால், 10 ஆண்டுகளாக இந்த இடம் பராமரிப்பு இல்லாமல், புதர்மண்டி கிடந்தது. அதில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் இருந்தன.இது குறித்து, குடிநீர் வாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, முட்புதர்களை அகற்றி இடம் சுத்தம் செய்யப்பட்டது. இதன்மூலம், அருகில் வசிப்போர் நிம்மதி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X