பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் 'கிரஷர்' புழுதியால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருநீர்மலை : திருநீர்மலையில், அதிகரிக்கும் கிரஷர் புழுதியால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து, விபத்தை சந்திக்கும் சூழல் நிலவுகிறது.திருநீர்மலையில், புறவழிச்சாலையின் அணுகு சாலையை ஒட்டி, ஜல்லிக் கற்களை அரைத்து பொடியாக்க கிரஷர் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான லாரிகள், கிரஷர் லோடுகளை ஏற்றிக்கொண்டு,
 அதிகரிக்கும் 'கிரஷர்' புழுதியால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து

திருநீர்மலை : திருநீர்மலையில், அதிகரிக்கும் கிரஷர் புழுதியால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து, விபத்தை சந்திக்கும் சூழல் நிலவுகிறது.திருநீர்மலையில், புறவழிச்சாலையின் அணுகு சாலையை ஒட்டி, ஜல்லிக் கற்களை அரைத்து பொடியாக்க கிரஷர் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன.

இங்கிருந்து, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான லாரிகள், கிரஷர் லோடுகளை ஏற்றிக்கொண்டு, பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றன.இப்படி செல்லும் லாரிகளில் இருந்து சிந்தும் கிரஷர் துகள்கள், புறவழிச்சாலையின் அணுகு சாலை மற்றும் திருநீர்மலை பேரூராட்சிக்கு செல்லும் சாலைகளில், குவியல் குவியலாக தேங்கியுள்ளன.கன ரக வாகனங்கள் செல்லும் போது, கிரஷர் புழுதி காற்றில் பறந்து, பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளையும், நடந்து செல்பவர்களையும் சூழ்ந்து கொள்கிறது. அதுபோன்ற நேரத்தில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.சில நேரங்களில், சாலை தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. எத்தனை முறை புகார் தெரிவித்தாலும், இதை தடுக்க முடியவில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இவ்விஷயத்தில், வருவாய்-, நெடுஞ்சாலை துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை உண்டாக்கும், கிரஷர் புழுதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X