பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லையில் கடல் உள்வாங்கியது

Added : செப் 14, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : கடற்பகுதி நீரோட்ட போக்கு திசை மாற்றத்தால், மாமல்லபுரம் பகுதியில் கடல் உள் வாங்கியது. இதனால், புதிய மணற்பரப்புடன் கூடிய கடற்கரை பகுதி காணப்படுகிறது. இதை சுற்றுலா பயணியர் ஆவர்த்துடன் கண்டு ரசிக்கின்றனர். கடற்பகுதியில், பருவகால மாற்றத்திற்கு ஏற்ப, கடல் நீரோட்ட போக்கின் திசை மாற்றமடையும். வங்க கடலில், ஜன., - ஜூன் காலத்தில், தெற்கு திசையிலிருந்து, வடக்கு
 மாமல்லையில் கடல் உள்வாங்கியது

மாமல்லபுரம் : கடற்பகுதி நீரோட்ட போக்கு திசை மாற்றத்தால், மாமல்லபுரம் பகுதியில் கடல் உள் வாங்கியது.

இதனால், புதிய மணற்பரப்புடன் கூடிய கடற்கரை பகுதி காணப்படுகிறது. இதை சுற்றுலா பயணியர் ஆவர்த்துடன் கண்டு ரசிக்கின்றனர். கடற்பகுதியில், பருவகால மாற்றத்திற்கு ஏற்ப, கடல் நீரோட்ட போக்கின் திசை மாற்றமடையும். வங்க கடலில், ஜன., - ஜூன் காலத்தில், தெற்கு திசையிலிருந்து, வடக்கு நோக்கியும்; ஜூலை - டிச., காலத்தில், வடக்கு திசையிலிருந்து, தெற்கு நோக்கியும் நீரோட்ட திசை மாற்றம் நிகழும்.வடபுற திசை நோக்கிய மாற்றத்தின்போது, கடற்கரை நிலப்பகுதியில், கடல் நீர் புக துவங்கி, மணற்பரப்பு படிப்படியாக குறைந்து, கடற்கரை காணாமல் போகும். தென்புற திசை நோக்கிய மாற்றத்தின்போது, கடற்பகுதி மணல், கரை பகுதிக்கு தொடர்ந்து குவிக்கப்பட்டு, புதிய கடற்கரை மணற்பரப்புடன் உருவாகும்.சில மாதங்களுக்கு முன், கடல் நீர் புகுந்து கடற்கரை பகுதி அழிந்தது. தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால், கடற்பகுதி, சற்று தொலைவிற்கு உள்வாங்கி, கடற்கரை மணற்பரப்பு மீண்டும் உருவாகியுள்ளது.

இத்தகைய இயற்கை மாற்ற நிகழ்வை, மாமல்லபுரம் பகுதியில், கடற்கரை பகுதி பாறை குன்றுகளை, கடல் சூழ்ந்து விலகும் நிகழ்வின் மூலம் அறியலாம்.கடற்கரை கோவில் வளாகத்திற்கு வெளியே, வடபுற கடற்கரை பகுதி, மகிஷாசுரமர்த்தினி சிற்ப பாறைகுன்று, பருவகால மாற்ற நிகழ்விற்கேற்ப, மணல் அரித்து, கடலால் சூழப்படும். பின், மணற்பரப்பு மீண்டும் உருவாகி, குன்றிலிருந்து, சற்று தொலைவிற்கு, கடல் உள் வாங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X