பொது செய்தி

தமிழ்நாடு

சைதை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிகள் தீவிரம்.

Added : செப் 14, 2021
Share
Advertisement
சைதாப்பேட்டை : சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அங்கு, கூடுதலாக டாக்டர்கள், நர்சுகள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.சைதாப்பேட்டை, அரசு பொது மருத்துவமனை 1920ம் ஆண்டு துவங்கியது. சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, அடையாறு, சோழிங்கநல்லுார், நீலாங்கரை, போரூர், ஆலந்துார் சுற்றுவட்டார பகுதி மக்கள், இந்த மருத்துமனையை

சைதாப்பேட்டை : சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அங்கு, கூடுதலாக டாக்டர்கள், நர்சுகள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

சைதாப்பேட்டை, அரசு பொது மருத்துவமனை 1920ம் ஆண்டு துவங்கியது. சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, அடையாறு, சோழிங்கநல்லுார், நீலாங்கரை, போரூர், ஆலந்துார் சுற்றுவட்டார பகுதி மக்கள், இந்த மருத்துமனையை பயன்படுத்தி சிகிச்சை பெறுகின்றனர். ராயப்பேட்டை, ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகள் செல்லும், விபத்து, தீக்காயம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். இந்த, மருத்துவமனையில் மேலும் வசதிகளை அதிகரித்து, தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 'டயாலிசிஸ்' மற்றும் பொது அறுவை சிகிச்சை வசதி செய்யப்பட உள்ளது.இதற்கு முன்னோட்டமாக, கூடுதலாக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இதர ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே, 6 டாக்டர்கள் இருந்தனர். தற்போது, கூடுதலாக 6 டாக்டர்கள், 5 நர்ஸ்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப இதர ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கட்டடத்தில், சிகிச்சை இடங்களும் மாற்றி அமைத்து, புதுப்பிக்கப்பட்டு உள்ளன. முதலுதவி அவசர சிகிச்சை பிரிவு, இடப்பற்றாக்குறையாக இருந்தது. தற்போது, கட்டமைப்பை மாற்றி அமைத்து, எளிதாக புழங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அதில், குளிர்சாதன வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.தனியார் மருத்துவமனைக்கு இணையாக, இந்த அரசு மருத்துவமனை, படிப்படியாக தரம் உயர்வதால், சைதாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X