பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழையை எதிர்கொள்ள பல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி

Added : செப் 14, 2021
Share
Advertisement
அடையாறு : பருவ மழையின் போது, வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்பில் இருந்து, பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பாக, துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.அடையாறு மண்டலம், 177, 178, 179 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதியை உள்ளடக்கியவை. இங்கு,ஒவ்வொரு பருவ மழைக்கும், வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும்.கால்வாய் கட்டமைப்பு மேம்பாடு, துார்

அடையாறு : பருவ மழையின் போது, வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்பில் இருந்து, பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பாக, துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அடையாறு மண்டலம், 177, 178, 179 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதியை உள்ளடக்கியவை. இங்கு,ஒவ்வொரு பருவ மழைக்கும், வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும்.கால்வாய் கட்டமைப்பு மேம்பாடு, துார் வாரும் பணி என, ஒவ்வொரு ஆண்டும், பருவமழைக்கான சீரமைப்பு பணிகள் செய்தாலும், வெள்ள பாதிப்பை தடுக்க முடிவதில்லை.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், நீரோட்டம் வேகமாக இருந்தால் தான், வேளச்சேரி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும்.இதற்கான தொலைநோக்கு திட்டங்கள் இன்னும் செயல் வடிவம் பெறவில்லை. இருந்தாலும், ஒவ்வொரு பருவமழைக்கும், மாநகராட்சி தயார் நிலையில் இருக்க வேண்டி உள்ளது.இதற்காக, அதிகாரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

மாநகராட்சி, வருவாய், காவல், சுகாதாரம், குடிநீர் வாரியம், தீயணைப்பு போன்ற பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில், அதிகாரிகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மின்னல், புயல், வெள்ள பாதிப்பின் போது, பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது, அவர்களை தங்க வைக்கும் முகாம்களில் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் போன்றவை குறித்து விளக்கப்பட்டது.வானிலை ஆய்வு மையம், தீயணைப்பு துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை போன்ற துறைகளில் உள்ள, நிபுணத்துவம் வாய்ந்த உயர் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X