பொது செய்தி

இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு அனுமதி

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி-'பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பான, 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பின் அனுமதி இந்த வாரம் வழங்கப்படும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.நம் நாட்டில் 'கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் - வி' ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், கோவாக்சின் தடுப்பூசியை தெலுங்கானாவின் ஐதரா பாதை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து

புதுடில்லி-'பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பான, 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பின் அனுமதி இந்த வாரம் வழங்கப்படும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news


நம் நாட்டில் 'கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் - வி' ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், கோவாக்சின் தடுப்பூசியை தெலுங்கானாவின் ஐதரா பாதை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது.கோவாக்சின் தடுப்பூசி 78 சதவீத செயல் திறன் வாய்ந்தது என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news


இந்த அனுமதியை பெறுவதன் வாயிலாக, மேலும் பல நாடுகளுக்கு கோவாக்சின் ஏற்றுமதி செய்யப்படும். அதோடு, கோவாக்சின் போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்வதில் உள்ள சிக்கல்களும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divakaran K - Chennai ,இந்தியா
14-செப்-202112:37:34 IST Report Abuse
Divakaran K மகிழ்சியான செய்தி மிக விரைவில் விரைவில்அனுமதி தரவேண்டும், ஏனெனில் என்னைப்போல் வெளிநாடு செல்ல கோவாச்சின் போட்டுக்கொண்டவர்கள் மிகவும் மன உழைச்சள், குழப்பமாக இருப்பவர்கள் பல ஆயிரம் பேர்களுக்கு சற்று நம்பிக்கைகிடத்துள்ளது. விரைவில் அனுமதிகிடைத்த செய்தி தினமலர் நாளிதழிழ் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். தினமலர் நாளிதழுக்கு நன்றி 💐🙏
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
14-செப்-202109:28:31 IST Report Abuse
pattikkaattaan சீன தடுப்பூசிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்கும் இந்த உலக சுகாதார அமைப்பு , அதன் செயல்திறன் குறித்து கண்டுகொள்வதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X