பொது செய்தி

தமிழ்நாடு

ஏகாம்பரநாதர் கோவிலில் போலீசார் திடீர் ஆய்வு

Added : செப் 14, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆவணங்கள் பட்டியலில் பெயர் இல்லாத, 16 சிலைகள் இருப்பது குறித்த புகாரை தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று ஆய்வு செய்தனர்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் ஆபரணங்கள் குறித்து, கோவில் ஆவணம் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதன்படி, சிலைகள் அந்தந்த உற்சவத்திற்கு பயன்படுத்தி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆவணங்கள் பட்டியலில் பெயர் இல்லாத, 16 சிலைகள் இருப்பது குறித்த புகாரை தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று ஆய்வு செய்தனர்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் ஆபரணங்கள் குறித்து, கோவில் ஆவணம் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதன்படி, சிலைகள் அந்தந்த உற்சவத்திற்கு பயன்படுத்தி வரப்படுகின்றன.

இந்நிலையில், கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள சிலை பாதுகாப்பு சுரங்க அறையில், 16 சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.அந்த சிலைகள் குறித்த தகவல், கடந்த ஆண்டு நவ., 8ம் தேதி ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆவணங்கள் பெயர் பட்டியலில் இல்லாத சிலைகள், எப்படி சிலை பாதுகாப்பு அறைக்கு வந்தன என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இருவர், ஏகாம்பரநாதர் கோவில் சிலைகள் பாதுகாப்பு சுரங்க அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X