பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.6 கோடியில் மழைநீர் வடிகால் கோவிலம்பாக்கத்தில் பணிகள் வேகம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோவிலம்பாக்கம் : கோவிலம்பாக்கம் ஊராட்சியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 6 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, துரித கதியில் நடந்து வருகிறது.நவ., இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒவ்வொரு ஆண்டும், பருவ மழை காலத்தில், தென்சென்னை புறநகரில் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், சுண்ணாம்புக் கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில்
 ரூ.6 கோடியில் மழைநீர் வடிகால் கோவிலம்பாக்கத்தில் பணிகள் வேகம்

கோவிலம்பாக்கம் : கோவிலம்பாக்கம் ஊராட்சியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 6 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, துரித கதியில் நடந்து வருகிறது.நவ., இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும், பருவ மழை காலத்தில், தென்சென்னை புறநகரில் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், சுண்ணாம்புக் கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, பெரும் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். பஞ் சம்குறிப்பிட்ட பகுதிகளில் மழை நீர் உள்வாங்க ஏதுவாக, முறையான வடிகால் வசதி இல்லாததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, நம் நாளிதழ்சார்பில், 'நமக்கு நாமே' திட்டம் அறிவிக்கப்பட்டது. நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டன.அதன் பின் விழித்துக் கொண்ட அரசு, மழை நீர் வடிகால்களை சீரமைக்கும் பணிகளில் தீவிரம் காட்ட துவங்கியது. இந்நிலையில், கீழ்கட்டளை ஏரியில் இருந்து, நாராயணபுரம் ஏரிக்கு உபரிநீர் மழை நீர் சேகரமாகும் வகையில், ரேடியல்சாலையின் இருபுறமும், 6 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.அதே போல், கோவிம்பாக்கம், சுண்ணாம்புக் கொளத்துார், காகிதபுரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்து, அதனை போக்கு கால்வாய், பிரம்மாண்ட மழை நீர் கால்வாயுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:கோவிலம்பாக்கம் ஊராட்சியில் மழை நீர் உடனடியாக வடியும் வகையில், 6 கோடி ரூபாய் மதிப்பில், 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. 6 அடி அகலமும், 4 அடி ஆழமும் கொண்ட இந்த வடிகால் போக்கு கால்வாய், பிரம்மாண்ட வடிகாலுடன் இணைக்கப்படும். கோவிலம்பாக்கம், சுண்ணாம்புக் கொளத்துார், மடிப்பாக்கம் பகுதிகளில் மழை நீர் வடிய இந்த வடிகால் ஏதுவாக இருக்கும். நவ., இறுதிக்குள் பணிகளை முடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X