சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போடச் சொல்லி மாநகராட்சியினர் அராஜகம்?

Added : செப் 14, 2021
Share
Advertisement
மதுரவாயல் : தடுப்பூசி போட சொல்லி, பைக்கில் சென்றவர்களை மடக்கி தாக்குதலில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரவாயல், கணபதி நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 30. இவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார்.அதில், கூறப்பட்ட தாவது:நேற்று முன்தினம் தன் சகோதரருடன் இருசக்கர வாகனத்தில், வானகரம், மேட்டுக்குப்பம் வழியாக

மதுரவாயல் : தடுப்பூசி போட சொல்லி, பைக்கில் சென்றவர்களை மடக்கி தாக்குதலில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரவாயல், கணபதி நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 30. இவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார்.அதில், கூறப்பட்ட தாவது:நேற்று முன்தினம் தன் சகோதரருடன் இருசக்கர வாகனத்தில், வானகரம், மேட்டுக்குப்பம் வழியாக சென்றேன். அங்கு, சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.அங்கிருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் எங்களை மடக்கி, தடுப்பூசி செலுத்தி கொண்டீர்களா எனக் கேட்டனர்.

தடுப்பூசி செலுத்தி கொண்டதாக கூறினோம்.அந்த ஊழியர்கள் என் மொபைல் போனை பறித்து, தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆவணங்களை கேட்டதால், வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, அந்த ஊழியர்கள் தன் நண்பர்களுடன் சேர்ந்து என்னையும் எனது சகோதரனையும் தாக்கினர். அராஜகமாக நடந்து கொண்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, மதுரவாயல் போலீசார் இருவரையும் தாக்கிய, சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களான போரூரைச் சேர்ந்த கருணாகரன், 25, மற்றும் அஜய், 25, ஆகிய இருவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X