பொது செய்தி

தமிழ்நாடு

விடுதி மாடியிலிருந்து குதித்து கல்லுாரி மாணவி தற்கொலை

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே, கல்லுாரி விடுதியின், இரண்டாவது மாடியில் இருந்து குதித்து, மாணவி தற்கொலை செய்து கொண்டார்.அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிதா, 19. இவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே, தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த அபிதா, சரியாக படிக்காமல் இருந்ததாக

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே, கல்லுாரி விடுதியின், இரண்டாவது மாடியில் இருந்து குதித்து, மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிதா, 19. இவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே, தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த அபிதா, சரியாக படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில், இரண்டு தினங்களுக்கு முன், தன் கையை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.விடுதி காப்பாளர் அபிதாவை காப்பாற்றி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.சிகிச்சைக்கு பின், விடுதியில் தங்கியிருந்த அபிதாவை வீட்டிற்கு அழைத்து செல்ல, அவரது தந்தை தங்ககுமார், கல்லுாரிக்கு நேற்று மாலை சென்றார்.அப்போது விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து, அபிதா கீழே குதித்தார்.

இதில், பலத்த காயமடைந்த அபிதாவை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அபிதா இறந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X