பொது செய்தி

தமிழ்நாடு

செவிலியர்களுக்கு தங்கும் விடுதி மறுப்பு மருத்துவ கல்வி இயக்குனரகம் முற்றுகை

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள், தங்கும் விடுதி அளிக்க கோரி, மருத்துவ கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள், நேற்று அருகே உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, எம்.ஆர்.பி.,

சென்னை : கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள், தங்கும் விடுதி அளிக்க கோரி, மருத்துவ கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள், நேற்று அருகே உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, எம்.ஆர்.பி., கொரோனா செவிலியர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலர் ராஜேஷ் கூறியதாவது:கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டுகளில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக பணியில் அமர்த்தப்பட்டோம். கடந்த டிசம்பரில் எங்களது பணிக்காலம் முடிவடைந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக பணி நீடிக்கப்பட்டுஉள்ளது.

தொடர்ந்து பணியில் இருந்து வரும் எங்களுக்கு, இதுவரை வழங்கப்பட்டு வந்த விடுதி வசதிகளை, மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருகிறது. கொரோனா பணியில் ஈடுபடுவதால், வெளியே எங்கும் தங்க முடியவில்லை. சீருடையுடன், ரயில்கள், பேருந்துகளில் பணிக்கு வரும்போது, அனைவரும் தள்ளியே நிற்பது வேதனை அளிக்கிறது. எனவே, அரசு உடனடியாக தலையிட்டு, எங்களுக்கு விடுதி, தொகுப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X