தமிழ்நாடு

என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை 'சவீதா' பல்கலை அசத்தல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை : என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையில், மாநில அளவில் சவீதா பல் மருத்துவ கல்லுாரி மற்றும் சட்டக்கல்லுாரி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தாண்டுக்கான என்.ஐ.ஆர்.எப்., எனும் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் வெளியிட்டார்.அதில், என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையில், 'சவீதா' பல் மருத்துவக் கல்லுாரி மற்றும்
 என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை 'சவீதா' பல்கலை அசத்தல்

சென்னை : என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையில், மாநில அளவில் சவீதா பல் மருத்துவ கல்லுாரி மற்றும் சட்டக்கல்லுாரி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்தாண்டுக்கான என்.ஐ.ஆர்.எப்., எனும் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் வெளியிட்டார்.அதில், என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையில், 'சவீதா' பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் சட்டக் கல்லுாரி, மாநில அளவில் முதலிடம் பிடித்தன. தேசிய அளவில் சவீதா பல் மருத்துவக் கல்லுாரி 78.33 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும்; சவீதா சட்டக் கல்லுாரி 55.19 மதிப்பெண்ணுடன், 13வது இடத்தையும் பிடித்துள்ளன.
அதே போல், கடந்தாண்டை விட அனைத்து கல்லுாரிகளும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக, சவீதா நிகர்நிலை பல்கலைக்கழகம், தேசிய அளவில், 29வது இடத்தை பிடித்துள்ளது.''கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு, தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில், சவீதா தன் நிலையை மேம்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என விரும்புகிறேன்,'' என, சவீதா பல்கலை நிறுவனர் மற்றும் வேந்தர் வீரய்யன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X