பொது செய்தி

இந்தியா

'இயற்கையுடன் இணைந்த வாழ்வு அவசியம்': வெங்கையா நாயுடு

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''புதிய இந்தியாவின் பலமாக உள்ள இளைஞர்கள், உற்பத்தி மூலம் நாட்டை முன்னேற்றுவர்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.புதுச்சேரி, பிள்ளைச்சாவடியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை நேற்று துவக்கி வைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:புதுச்சேரியின் முதல் மாநில பல்கலைக் கழகம் இது. பொறியியல் கல்லுாரி தற்போது பல்கலைக்

புதுச்சேரி-''புதிய இந்தியாவின் பலமாக உள்ள இளைஞர்கள், உற்பத்தி மூலம் நாட்டை முன்னேற்றுவர்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.



latest tamil news


புதுச்சேரி, பிள்ளைச்சாவடியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை நேற்று துவக்கி வைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:புதுச்சேரியின் முதல் மாநில பல்கலைக் கழகம் இது. பொறியியல் கல்லுாரி தற்போது பல்கலைக் கழகமாக தரம் உயர்ந்துள்ளது. இதனால் அதிக வாய்ப்புகள் உருவாகும். புதிய படிப்புகள் துவங்க முடியும். வளர்ந்த நாடுகள் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துகின்றன. இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ள நிலையில், பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறுமை ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது பருவ நிலை மாற்றம் வளர்ந்த நாடுகளில் பெரும் பாதிப்பாக உள்ளது. குறிப்பாக, வெப்ப நிலை உயர்வு, வெள்ளம் ஆகியவை அதிகரித்துள்ளன. பிரான்சில் நடந்த மாநாட்டில், பருவ நிலை மாற்றம் குறித்து விவாதித்தபோது, அனைவரும் இயற்கை சூழலை காக்க ஒன்றுபட வலியுறுத்தப்பட்டது. இதனால், நாம் வேர்களைத் தேடி செல்ல வேண்டும். ஆரோக்கியமான உணவு, இயற்கையுடன் இணைந்த வாழ்வு, கலாசாரம் ஆகியவை எதிர்காலத்துக்கு தேவையாகும். குறிப்பாக பீட்சா, பர்கர் நம் சூழலுக்கு உகந்தது அல்ல. நம் உணவே சிறந்தது. உடல் பயிற்சி அவசியம். அதனால் மனவளம் மேம்படும்.இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீதத்தினர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள். இது தான் புதிய இந்தியாவின் பலம். இந்த இளைஞர்களால், நம் நாட்டை உற்பத்தி மூலம் முன்னேற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 2.5 மெகா வாட் திறனுள்ள சூரிய ஒளி மின்சக்தி நிலையத்தை நேற்று வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X