குடிநீர் தொட்டிகளின் மூடி சரிசெய்யப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தொட்டிகளின் மூடி சரிசெய்யப்படுமா?

Added : செப் 14, 2021
Share
சென்னை மாதவரம் மண்டலத்தில் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர், புழல் பத்மாவதி நகர், சூரப்பட்டு உள்ளிட்ட, பல இடங்களில், 3,000 மற்றும் 5,000 லிட்டர் அளவுள்ள சின்டெக்ஸ் பிளாஸ்டிக் தொட்டிகள், குடிநீர் வினியோகத்திற்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தண்ணீர் நிரப்பப்படுகிறது.இவற்றில் பல குடிநீர் தொட்டிகளுக்கு மூடி இல்லை. ஓராண்டாக பராமரிப்பும் இல்லை. இதனால்,

சென்னை மாதவரம் மண்டலத்தில் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர், புழல் பத்மாவதி நகர், சூரப்பட்டு உள்ளிட்ட, பல இடங்களில், 3,000 மற்றும் 5,000 லிட்டர் அளவுள்ள சின்டெக்ஸ் பிளாஸ்டிக் தொட்டிகள், குடிநீர் வினியோகத்திற்காக வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தண்ணீர் நிரப்பப்படுகிறது.இவற்றில் பல குடிநீர் தொட்டிகளுக்கு மூடி இல்லை. ஓராண்டாக பராமரிப்பும் இல்லை. இதனால், பறவைகள் கொண்டு வந்து போடும் உணவு கழிவுகள், குப்பை கழிவுகள் உள்ளே விழுகின்றன. அதனால், சில நாட்களுக்குப் பின் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குடிநீரை பயன்படுத்துவோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகின்றனர். எனவே, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X