சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு இளைஞர் பிரிவினரிடையே தகராறில் ஒருவர் கொலை

Added : செப் 14, 2021
Share
Advertisement
ராம்நகர் : விநாயகர் சிலை கரைக்கும் போது, இரண்டு இளைஞர்கள் பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில், 45 வயது நபர் கொலை செய்யப்பட்டார்.ராம்நகர் மாவட்டம், மாகடி தாலுகா, சாதமாரனஹள்ளி கிராமத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி, விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.கடந்த, 10ல் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, மூன்றாம் நாளான நேற்று முன்தினம் இரவு, சிலையை ஏரியில் கரைக்க ஊர்வலமாக

ராம்நகர் : விநாயகர் சிலை கரைக்கும் போது, இரண்டு இளைஞர்கள் பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில், 45 வயது நபர் கொலை செய்யப்பட்டார்.ராம்நகர் மாவட்டம், மாகடி தாலுகா, சாதமாரனஹள்ளி கிராமத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி, விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.

கடந்த, 10ல் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, மூன்றாம் நாளான நேற்று முன்தினம் இரவு, சிலையை ஏரியில் கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்றனர்.அப்போது இளைஞர்களின் இரண்டு பிரிவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு பிரிவினரும் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.இச்சம்பவத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் சுகந்தராஜு, 45, என்பவரை இரும்பு தடியால் அடித்து கொலை செய்யப்பட்டார். உடனே சிலையை கரைக்காமல் அங்கிருந்தோர், நாலாபுறமும் ஓடினர்.உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த தாக்குதலை சிலர் 'வீடியோ' எடுத்துள்ளனர். அதை கைப்பற்றி கொலை செய்த நபர்களை போலீசார் தேடுகின்றனர். இதையறிந்த கொலையாளிகள் தலைமறைவாகினர். சாதமாரனஹள்ளி கிராமத்தில் பதற்ற சூழ்நிலை நிலவுவதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் முகாமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X