பொது செய்தி

தமிழ்நாடு

துளு மொழிக்கு மாநில அந்தஸ்து

Added : செப் 14, 2021
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் அதிகம் பேசும் துளு மொழிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வகையில், சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல் செய்ய மாநில அரசு தயாராகி வருகிறது.கர்நாடகாவின் உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உட்பட சில பகுதிகளில் துளு மொழி பேசுவோர் அதிகமாக வாழ்கின்றனர். ஆந்திராவில் உருது, பீஹாரில் வங்கம், மேற்கு வங்கத்தில் உருது மற்றும் பஞ்சாப்

பெங்களூரு : கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் அதிகம் பேசும் துளு மொழிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வகையில், சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல் செய்ய மாநில அரசு தயாராகி வருகிறது.கர்நாடகாவின் உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உட்பட சில பகுதிகளில் துளு மொழி பேசுவோர் அதிகமாக வாழ்கின்றனர்.

ஆந்திராவில் உருது, பீஹாரில் வங்கம், மேற்கு வங்கத்தில் உருது மற்றும் பஞ்சாப் மொழிகளுக்கு மாநில மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.அது போன்று, துளு மொழி மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர்.இந்நிலையில், கன்னட மற்றும் கலாச்சார துறை அமைச்சர் சுனில்குமார், இம்முறை மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரில், துளுவுக்கு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதாவை தாக்கல் செய்யவுள்ளார்.சட்டசபை, சட்ட மேலவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய பின், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின், துளு மொழிக்கு மாநில அஸ்தஸ்து கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X