கல்வி உதவித் தொகை: அமைச்சர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித் தொகை: அமைச்சர் வழங்கல்

Added : செப் 14, 2021
Share
செஞ்சி : பெற்றோரை இழந்த பள்ளி மாணவியின் படிப்புக்காக அமைச்சர் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊராட்சியில் ஏரிக்கரை மீது பனை விதை நடும் விழா மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தான், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.அப்போது நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு
 கல்வி உதவித் தொகை: அமைச்சர் வழங்கல்

செஞ்சி : பெற்றோரை இழந்த பள்ளி மாணவியின் படிப்புக்காக அமைச்சர் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊராட்சியில் ஏரிக்கரை மீது பனை விதை நடும் விழா மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது.

விழாவில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தான், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.அப்போது நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெயஸ்ரீ பள்ளி சீருடையில் வந்து மனு கொடுத்தார்.அதில் தனது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார், தன்னை வளர்த்த தாய் மற்றும் பாட்டி இருவரும் 6 மாதங்களுக்கு முன் இறந்தனர். மேற்கொண்டு படிக்க வழி இல்லை என தெரிவித்திருந்தார்.இதையடுத்து அமைச்சர் மஸ்தான், மாணவி ஜெயஸ்ரீயின் கல்விக்காக உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கினார். மேலும், பிளஸ் 2 முடித்து, உயர்கல்வி படிக்க அனைத்து உதவியும் செய்வதாக உறுதியளித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், விஜயராகவன், அவைத்தலைவர் பச்சையப்பன் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X