அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் எழுச்சியே தடுப்பூசி சாதனைக்கு காரணம்: அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில், மக்களிடையே ஒரு வித தயக்கம் இருந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு வகையில் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எனவே, தமிழகம் முழுதும், 40 ஆயிரம் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் தடுப்பூசி சிறப்பு

சென்னை-தமிழகத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில், மக்களிடையே ஒரு வித தயக்கம் இருந்தது.

அதைத் தொடர்ந்து, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு வகையில் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எனவே, தமிழகம் முழுதும், 40 ஆயிரம் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் ஒரே நாளில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:இந்தியாவில் இதுபோன்று எந்த மாநிலமும் தடுப்பூசியில் சாதனை படைக்கவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில், 20 கோடி பேர் தடுப்பூசி போட தகுதியானவர்களாகஉள்ளனர். அம்மாநிலத்தில் நடந்த தடுப்பூசி முகாமில், ஒரே நாளில், 28 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டது.தமிழகத்தில் 6.06 கோடி மக்கள் தான், தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள். இங்குள்ள மக்களின் எழுச்சி காரணமாக, நேற்று முன்தினம் ஒரே நாளில், 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.இது, இந்தியா அளவிலான மகத்தான சாதனை. மக்கள் திரண்டு வந்ததை பார்த்து நாங்களே வியந்தோம். பல மையங்களில் மதியம், 1:00 மணிக்குள் தடுப்பூசி காலியாகி விட்டது.

நம்மிடம் கூடுதலாக தடுப்பூசி இருந்திருந்தால், ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கூட போட்டிருக்கலாம். தடுப்பூசி அதிகம் இருந்தால், தினமும், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடலாம். அரசின் முயற்சி, மக்களின் எழுச்சி, தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்பே இந்த வெற்றிக்கு காரணம். சிறப்பு தடுப்பூசி முகாம்களில், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் களத்தில் இறங்கி பணியாற்றின. அவர்கள் வாயிலாக தடுப்பூசி போட்டவர்களுக்கு, குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இவற்றை தடுப்பூசி முகாம் என்பதை விட, தடுப்பூசி திருவிழா என்றே கூறலாம்.

தற்போது, வாரத்திற்கு 50 லட்சம் என்ற அளவில், மாதத்திற்கு 2 கோடி தடுப்பூசிகள் கேட்டு, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு கடிதம் எழுதியுள்ளேன்.மத்திய அரசு தடுப்பூசி வழங்கும் பட்சத்தில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இரண்டு, மூன்று மாதங்களில், 80 சதவீதம்பேருக்கு, இரண்டு தவணை தடுப்பூசிகளை போட்டு முடிக்கலாம்.இதன் வாயிலாக, மூன்றாம் அலை கொரோனா தொற்றை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X