பொது செய்தி

தமிழ்நாடு

நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும் முதன்மை கணக்காய்வு தலைவர் பேட்டி

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை-''நிதியை சரியான முறையில் பயன்படுத்துவதன் வாயிலாக, அரசின் திட்டங்கள் மக்களை சிறப்பாக சென்றடையும்,'' என, தமிழக முதன்மை கணக்காய்வு தலைவர் அம்பலவாணன் தெரிவித்தார்.தணிக்கை அறிக்கைசென்னை தேனாம்பேட்டையில் உள்ள இந்திய கணக்காய்வு அலுலகத்தில், அவர் அளித்த பேட்டி:உயர் கல்வி, மக்கள் நல்வாழ்வு, வேளாண், ஊரக வளர்ச்சி, சத்துணவு, வருவாய், ஆதிதிராவிடர் நலன் ஆகிய ஏழு

சென்னை-''நிதியை சரியான முறையில் பயன்படுத்துவதன் வாயிலாக, அரசின் திட்டங்கள் மக்களை சிறப்பாக சென்றடையும்,'' என, தமிழக முதன்மை கணக்காய்வு தலைவர் அம்பலவாணன் தெரிவித்தார்.

தணிக்கை அறிக்கைசென்னை தேனாம்பேட்டையில் உள்ள இந்திய கணக்காய்வு அலுலகத்தில், அவர் அளித்த பேட்டி:உயர் கல்வி, மக்கள் நல்வாழ்வு, வேளாண், ஊரக வளர்ச்சி, சத்துணவு, வருவாய், ஆதிதிராவிடர் நலன் ஆகிய ஏழு துறைகளின், 2019 - 20ம் நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதை, சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு செய்யும். மற்ற துறைகளின் அறிக்கை, அடுத்த தொடரில் சமர்ப்பிக்கப்படும்.தற்போது தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மாநிலம் முழுதும் உள்ள அரசு கல்லுாரிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில், 51 சதவீதம் காலியாக இருந்தது. இது, கல்வித் தரத்தின் மீது எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தும்.சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பாம்புக்கடி மருந்து உற்பத்தியை மீண்டும் துவக்குவதற்கான திட்டம் துவக்கப்பட்டது.

வீண் செலவு

அதற்குரிய முழுமையான தொழில்நுட்பம் மற்றும் நிதி வகையிலான சாத்தியக்கூறு ஆய்வை நடத்தாமல், நிதி பெறும் வழியை உறுதி செய்யாமல் துவக்கியதால், 16.77 கோடி ரூபாய் வீண் செலவு ஏற்பட்டது.'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட, 'பயோ டைஜெஸ்டர் டாய்லெட்' எனப்படும், உயிரி தொட்டி கழிப்பறை அமைப்பதில் மோசமான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் வாயிலாக, கிராமங்களில் மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. இதனால், 4.44 கோடி ரூபாய் வீண் செலவு ஏற்பட்டது.

'ஆதார்' பதிவு கருவி தொகுப்புகள் வாங்குவதை, தமிழக அரசின் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களின் தேவைக்கேற்ற அளவிற்கு குறைக்காததால், 7.85 கோடி ரூபாய் மதிப்புள்ள துணை கருவிகள், இரு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தன. சீரான நிதி நிர்வாகம் செய்வது, நிதியை சரியான முறையில் பயன்படுத்துவது போன்றவற்றின் வாயிலாக, அரசின் திட்டங்கள் மக்களை சிறப்பான முறையில் சென்றடையும்.இவ்வாறு அம்பலவாணன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X