பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 14, 2021
Share
Advertisement
1,580 பேருக்கு தொற்று பாதிப்பு சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் உள்ள 297 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும் 1.53 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், கோவையில் 204 பேர்; சென்னையில் 185 பேர்; ஈரோட்டில் 137 பேர்; தஞ்சாவூரில் 109 பேர்; செங்கல்பட்டில் 105 பேர்; திருப்பூரில் 84 பேர் என, 1,580 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

1,580 பேருக்கு தொற்று பாதிப்பு சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் உள்ள 297 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும் 1.53 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், கோவையில் 204 பேர்; சென்னையில் 185 பேர்; ஈரோட்டில் 137 பேர்; தஞ்சாவூரில் 109 பேர்; செங்கல்பட்டில் 105 பேர்; திருப்பூரில் 84 பேர் என, 1,580 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து, 16 ஆயிரத்து 522 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கூடுதல் பதிவாளர்கள் இடமாற்றம்சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகின்றன.அவருக்கு கீழ் கூடுதல் பதிவாளர்கள், இணை பதிவாளர்கள் உள்ளனர். மொத்தம் 22 கூடுதல் பதிவாளர்கள் பணியிடங்கள் உள்ளன.ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவது உள்ளிட்ட காரணங்களால், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, கூட்டுறவு ஒன்றியம் உட்பட, 12 கூடுதல் பதிவாளர்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். பழனிசாமிக்கு ஐகோர்ட் விலக்குசென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதுாறு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.மலையாள நடிகர் மரணம்கொச்சி: கேரள திரையுலகின் பிரபல நடிகர் ரிஸாபவா, 54. கடந்த மூன்று நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவால், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று மரணம் அடைந்தார். அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.கருணை வேலை: யாருக்கு உரிமைபுதுடில்லி: 'கர்நாடக மாநில சிவில் சர்வீஸ் சட்ட விதிகள் 1996ன்படி, இறந்த அரசு ஊழியரின் திருமணமாகாத மகளுக்கோ அல்லது அவரை நம்பியிருந்த அவரது விதவையான மகளுக்கோ தான், கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உண்டு' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.'ட்ரோன்'களை பயன்படுத்த அனுமதிபுதுடில்லி: விமானப் போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:அந்தமான் நிகோபார் தீவுகள், மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில், கொரோனா தடுப்பூசிகளை 'ட்ரோன்' வாயிலாக வினியோகிக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி ட்ரோன்களை, 3,000 மீட்டர் உயரம் வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.தீர்ப்பாயத்துக்கு தற்காலிக தலைவர் புதுடில்லி: என்.சி.எல்.ஏ.டி., எனப்படும் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு, மூன்றாவது முறையாக தற்காலிக தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த வேணுகோபால், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினராக, கடந்த 2019 அக்., 23ல் நியமிக்கப்பட்டார். புலிகள் கணக்கெடுப்பு புதுடில்லி: நம் நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், 2022க்கான கணக்கெடுப்பு இந்தாண்டே துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்., முதல் டிச., வரை, மூன்று கட்டங்களாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக மத்திய வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆளில்லா 'ரோபோ' வாகனம்லோத்: மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த, 'ரெக்ஸ் எம்கி' நிறுவனம், எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொள்ள, ஆளில்லா நான்கு சக்கர 'ரோபோ' வாகனத்தை உருவாக்கியுள்ளது. இதில், இரண்டு இயந்திர துப்பாக்கிகள், 'சென்சார்' மற்றும் கேமரா ஆகியவை உள்ளன. எல்லையில் ஊடுருவும் எதிரிகளை தன்னிச்சையாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் திறன் இந்த ரோபோவுக்கு உள்ளது.மலேஷிய அரசு ஒப்பந்தம்கோலாலம்பூர்: மலேஷியாவின் புதிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், போதிய பெரும்பான்மையின்றி ஆட்சி கவிழ்வதை தடுக்க, எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் விதித்த சில நிபந்தனைகளை ஏற்றுள்ளார். இதையடுத்து பார்லி.,யில், அன்வர் இப்ராஹிம் கட்சி உறுப்பினர்கள் 88 பேரின் ஆதரவு, ஆளும் கட்சிக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக, இரு தரப்பிற்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒட்டிப் பிறந்த குழந்தைகள் பிரிப்புஜெருசலம்: காஷ்மீரில் பிறந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வசித்து வரும் டாக்டர் நுார் உல் ஒவசி ஜிலானி, ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்றவர். இவர் மேற்பார்வையில் இஸ்ரேல் டாக்டர்கள், தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர். யூத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, முஸ்லிம் டாக்டர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தது, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளதாக, சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசிலண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா பரவலால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதை தடுக்க, 12 - 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட, அந்நாட்டின் மருத்துவ அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.பள்ளிகள் வழியாக தகுதியுடைய 30 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவில் துவங்கும் என, பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.ஆப்கன் மக்களுக்கு இந்தியா உதவிபுதுடில்லி: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.அவர் பேசுகையில், ''ஆப்கானிஸ்தான் நிலைமை கவலையளிக்கிறது. அங்குள்ள நிலைமையை இந்தியா கண்காணித்து வருகிறது. ஆப்கன் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில், அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. ஆப்கனில் அமைதி நிலவ, உலக நாடுகள் உதவ வேண்டும்,'' என்றார். தடுப்பூசிக்கான இடைவெளி குறைப்புசண்டிகர்: ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 'கோவிஷீல்டு' இரண்டு 'டோஸ்'க்கான கால இடைவெளி, 84 நாட்களாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.படிப்பு, வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு மட்டும், இரண்டு டோஸ்களுக்கான கால இடைவெ ளியை ஹரியானா அரசு குறைத்திருந்தது.இப்போது மருத்துவ சிகிச்சை உட்பட அவசர காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளோருக்கும், தடுப்பூசி இரண்டு டோஸ்களுக்கான கால இடைவெளியை ஹரியானா அரசு குறைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X